உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி
From Wikipedia, the free encyclopedia
உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி (Global Biodiversity Information Facility-GBIF) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும். இது இணைய வலைத்தள சேவைகளைப் பயன்படுத்தி இணையம் வழியாகப் பல்லுயிர் பற்றிய அறிவியல் தரவுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.[1] உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களால் தரவு வழங்கப்படுகிறது. உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதியின் தகவல் கட்டமைப்பானது இந்தத் தரவை அணுகக்கூடியதாகவும் ஒரே புறையம் மூலம் தேடக்கூடியதாகவும் ஆக்குகிறது. உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி மூலம் கிடைக்கும் தரவுகள், தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகள் மற்றும் அறிவியல் பெயர்கள் ஆகியன முதன்மையான தரவு ஆகும்.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, சேவைத்தளங்கள் ...
வலைத்தள வகை | உயிரியற் பல்வகைமை, இயற்கை வரலாறு |
---|---|
சேவைத்தளங்கள் | உலகம் முழுவதும் |
வணிக நோக்கம் | இல்லை |
வெளியீடு | 2001; 23 ஆண்டுகளுக்கு முன்னர் (2001) |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | www |
மூடு