உரூக்
From Wikipedia, the free encyclopedia
உரூக் (Uruk (/ˈuːrʊk/; சுமேரியம்: Unug; அக்காதியம்: Uruk; அரபு மொழி: وركاء, Warkā'; அரமேயம் / எபிரேயம்:אֶרֶךְ‘Ereḥ[1]; பண்டைக் கிரேக்கம்: Ὀρχόη Orḥoē, Ὀρέχ Oreḥ, Ὠρύγεια Ōrugeia) உரூக் காலத்தில் (கிமு 4000 முதல் கிமு 3100 முடிய) சுமேரியாவின் (கீழ் மெசொப்பொத்தேமியா) பண்டைய நகரங்களில் உரூக் நகரமும் ஒன்றாகும். இப்பண்டைய நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் உள்ள முத்தன்னா ஆளுநரகத்தில், சமாவா என்ற ஊரின் கிழக்கில் 30 கிமீ தொலைவில், யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் உள்ளது.[2]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
உரூக் 𒌷𒀕 or 𒌷𒀔 Unug சுமேரியம் Uruk (அக்காதியம்) وركاء Warkā(அரபு) | |
---|---|
இருப்பிடம் | அல்-வர்கா, முத்தன்னா ஆளுநரகம், ஈராக் |
பகுதி | மெசபடோமியா |
ஆயத்தொலைகள் | 31°19′27″N 45°38′14″E |
வகை | தொல்லியல் மேடு |
பரப்பளவு | 6 km2 (2.3 sq mi) |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 4,000 |
பயனற்றுப்போனது | கிபி 700 |
காலம் | உரூக் காலம் முதல் துவக்க மத்திய காலம் வரை |
பகுதிக் குறிப்புகள் | |
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் | |
அலுவல்முறைப் பெயர் | உரூக் தொல்லியல் நகரம் |
பகுதி | தெற்கு ஈராக்கின் அக்வார் பகுதி |
கட்டளை விதி | கலப்பு: (iii)(v)(ix)(x) |
உசாத்துணை | 1481-005 |
பதிவு | 2016 (40-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 541 ha (2.09 sq mi) |
Buffer zone | 292 ha (1.13 sq mi) |
சுமேரியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகித்த உரூக் நகரம், கிமு 4,000 முதல் கிபி 700 வரை புகழுடன் விளங்கியது. உரூக் நகரம், கிமு 2,900ல் புகழின் உச்சத்தில் இருந்த போது, 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 50,000 முதல் 80,000 வரையிலான குடியிருப்புகள் கொண்டிருந்தது.[2] கிமு 2700ல் உரூக் நகரத்தை சுமேரிய மன்னரான கில்கமெஷ் ஆண்டார். கிமு 2,000ல் பபிலோனியா - ஈலாம் இடையே நடைபெற்ற போரின் போது, உரூக் நகரம் தனது தனித் தன்மையை இழந்தது. இருப்பினும் செலூக்கியப் பேரரசு (கிமு 312 - 63), பார்த்தியப் பேரரசு (கிமு 227 - கிபி 224) காலங்களில் குன்றியிருந்த உரூக் நகரம், கிபி 7-ஆம் நூற்றாண்டில் (கிபி 633 - 638) மெசொப்பொத்தேமியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது முற்றிலும் அழிந்தது.
வில்லியம் கென்னட் லோப்டஸ் என்ற ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர், 1850 முதல் 1854 முடிய உரூக் நகரத்தின் தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு மேற்கொண்டார். உரூக் நகரத்தை அகழ்வாய்வு அறிக்கையில், இந்நகரத்தை மத்திய அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.[3]
2016ல் உரூக் நகரத் தொல்லியல் களத்தை, யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.