![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Webley-Mk-VI-p1030102.jpg/640px-Webley-Mk-VI-p1030102.jpg&w=640&q=50)
உருள்கலன் (துப்பாக்கி)
From Wikipedia, the free encyclopedia
சுடுகலங்களில், உருள்கலன் (cylinder) என்பது சுழல் கைத்துமுக்கியில், பல அறைகள் கொண்டிருக்கும் சுழலகூடிய பகுதியாகும். சுழல் கைத்துமுக்கியின் மத்திய அச்சில் இது சுழன்று, ஒவ்வொரு அறையையும் குழலையும் நேர்கோட்டில் நிறுத்தி, சுடுவதற்கு வித்திடுகிறது. ஒவ்வொரு முறையும் இதை சுற்றிவிடுகையில், சரியாக 60° சுற்றுவதால் (ஆறு-தோட்டா கொண்டவை), எப்போதுமே ஏதேனும் ஒரு அறையில் இருக்கும் வெடிபொதி வெடிக்க தயாராக இருக்கும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Webley-Mk-VI-p1030102.jpg/640px-Webley-Mk-VI-p1030102.jpg)
பொதுவான விதியின்படி, துப்பாக்கியிலிருந்து உருள்கலன்களை (சுத்தம் செய்ய தவிர்த்து) கழற்றமுடியாத வகையில்தான் வடிவமைக்கப் பட்டிருக்கும்.