உனகோடி
இந்தியாவின் திரிபுராவில் உள்ள பாரம்பரிய தளம் / From Wikipedia, the free encyclopedia
உனகோடி (Unakoti) என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு (9999999) என்பது. இது ஒரு வங்காள மொழிச் சொல் ஆகும். இது ஒரு பழமையான சைவத்தலமாகும். இங்கு பாறைகளில் புடைப்புச் சிற்பங்களும், கற்சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், கைலாசகர் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.[1] இது சைவ சமய யாத்திரை தலமாக உள்ளது. இது கி.பி. 7 – 9 நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த அற்புத பாறைக்குடைவுகளும், இதன் பழமையான அழகான சிற்பங்களும், அருவிகளும் தவறாமல் காண வேண்டியவை ஆகும். இங்கு ஈர்க்க்கூடியவை அற்புதமான பாறைச் செதுக்கல்கள், பழமையான அழகான சிற்பங்கள் மட்டுமல்லாது, இந்த இரம்மியான மலை காட்சியமைப்பும், அருவிகள் உட்பட இயற்கை அழகும் ஆகும்.
விரைவான உண்மைகள் உனகோடி, ஆள்கூறுகள்: ...
உனகோடி | |
---|---|
ஆள்கூறுகள்: | 24°19′N 92°4′E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | திரிபுரா |
மாவட்டம்: | உனகோடி |
அமைவு: | கைலாசகர் |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 600-700 BC |
மூடு