உசிலம்பட்டி வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உசிலம்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் உசிலம்பட்டி நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

உசிலம்பட்டி வட்டத்தின் கீழ் கருமாத்தூர், சிந்துபட்டி, உசிலம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், வாலாந்தூர் என 5 குறுவட்டங்களும், 54 வருவாய் கிராமங்களும் உள்ளன.] [2]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உசிலம்பட்டி தாலுக்காவின் மக்கள் தொகை 1,95,236 ஆகும். 99,804 ஆண்கள் மற்றும் 95,432 பெண்கள் இதில் இருந்தனர். இங்கு 1000 ஆண்களுக்கு 956 பெண்கள் என்ற பாலின விகிதம் நிலவுகிறது. 67.65 சதவீத படிப்பறிவும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொகையில் 8839 சிறுவர்கள் மற்றும் 7908 சிறுமிகள் அடங்கியுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads