![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Ilmenite-155036.jpg/640px-Ilmenite-155036.jpg&w=640&q=50)
இல்மனைட்டு
From Wikipedia, the free encyclopedia
இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. “ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுருங்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. கரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.
இல்மனைட் | |
---|---|
![]() இல்மனைட் 4.5 x 4.3 x 1.5 cm | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு தனிமம் |
வேதி வாய்பாடு | இரும்பு டைட்டானியம் , FeTiO 3 |
இனங்காணல் | |
நிறம் | கறுப்பு அல்லது சாம்பல் நிறம். |
படிக இயல்பு | துகள்களாகவும் பாறைகளாகவும் இருக்கும். |
படிக அமைப்பு | Trigonal Rhombohedral 3 |
இரட்டைப் படிகமுறல் | {0001} simple, {1011} lamellar |
பிளப்பு | absent; parting on {0001} and {1011} |
முறிவு | Conchoidal to subconchoidal |
விகுவுத் தன்மை | உடையக் கூடியது. |
மோவின் அளவுகோல் வலிமை | 5–6 |
மிளிர்வு | Metallic to submetallic |
கீற்றுவண்ணம் | Black |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகவிடாது |
ஒப்படர்த்தி | 4.70–4.79 |
ஒளியியல் பண்புகள் | Uniaxial (–) |
இரட்டை ஒளிவிலகல் | Strong; O = pinkish brown, E = dark brown (bireflectance) |
பிற சிறப்பியல்புகள் | பலவீனமான காந்தப்புலம் |