Remove ads
From Wikipedia, the free encyclopedia
இலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள் என்னும் இக்கட்டுரை, மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழ 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கையின் முத்துக்குளிப்புத் துறையில் பயின்று வந்த சொற்கள் தொடர்பானது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதி இலங்கைத் தீவின் வட மேற்கில் உள்ள நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கரையோரப் பகுதியை அண்டிய மன்னார்க் குடாப் பகுதியாகும். இப்பகுதி நீண்டகாலமாகத் தமிழ் அரசான யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் முத்துக்குளிப்புத் தொழிலில் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த கரையோரப் பகுதி மக்களுடன் பெருமளவிலான தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதி மக்களும் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பாண்டிநாட்டுக் கரையோரப் பகுதிகள் பண்டைக்காலம் தொட்டே முத்துக்குளிப்புக்குப் பெயர் போனவை. இதனால், தென் தமிழ்நாடு, இலங்கையின் வடபகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய முத்துக்குளிப்புப் பிரதேசத்தில் இத்தொழில் சார்ந்த பல தமிழ்ச் சொற்கள் உருவாகிப் பயன்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் கூட புழக்கத்தில் இருந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது. முத்துச் சிப்பிகள் விளையும் இடங்கள், முத்துகுளிக்கும் முறை, முத்துக் குளிப்போரும் படகோட்டிகளும் வேலை செய்யும் முறையும் அவர்களது பழக்கவழக்கங்களும், முத்துக்களின் தர அளவீடு போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்ச் சொற்கள் பயன்பட்டுள்ளன.
பார் - கடலுக்கு அடியில் முத்துச் சிப்பிகள் விளையும் இடம் "பார்" எனப்பட்டது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதியில் 19 பார்கள் வரை இருந்ததாகத் தெரிகிறது. அவை அவற்றுக்கு அண்மையில் உள்ள இடங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. அவற்றுட்சில பின்வருமாறு:[1]
வள்ளம் - வள்ளம் என்பது மரக்கலம், தோணி போன்ற பொதுப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், முத்துக்குளிப்பில் இதற்குச் சிறப்புப் பொருள் இருந்ததாகத் தெரிகிறது. முத்துக்குளிப்பு நடத்துவதற்கு வாய்ப்பான நிலைமைகள் உள்ளனவா என அறிவதற்கு அக்கால அரசாங்கம் 10,000 தொடக்கம் 20,000 வரையான முத்துச் சிப்பி மாதிரிகளை எடுத்து விளைச்சல் அளவை மதிப்பிடுவது வழக்கம். இதற்குப் பயன்பட்ட மரக்கல வகை வள்ளம் எனப்பட்டது. இவற்றில் சேகரிக்கப்படும் சிப்பிகள் இடுக்குகளுக்குள் மறைந்து விடாதபடி, துருத்திக்கொண்டு இருக்கக்கூடிய வளைகள் எதுவும் இல்லாமல் இதன் உட்புறம் மட்டமாக இருக்கும்.[2]
பெட்டி - முத்துக்களை மதிப்பிடுவதில் அவற்றின் பருமனும் முக்கியமானது. முத்துக்களை அளவின் அடிப்படையில் பிரிப்பதற்குப் 10 வேறுபட்ட அளவுகளைக் கொண்ட சல்லடைகள் பயன்பட்டன. இது பெட்டி எனப்பட்டது. சல்லடைகள் 3 அங்குல விட்டமும் ஒரு அங்குல ஆழமும் கொண்டவையாகப் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. அடிப் பக்கத்தில் சம அளவுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான துளைகள் இடப்பட்டிருக்கும். இவை மொத்தப் பரப்பில் நெருக்கமாக அமைந்திருக்கும். மிகப்பெரிய துளைகளைக் கொண்ட சல்லடை 20 துளைகளைக் கொண்டிருந்தது. அடுத்து, 30, 50, 80, 100, 200, 400, 600, 800, 1000 ஆகிய எண்ணிக்கையான துளைகளைக் கொண்ட சல்லடைகள் இருந்தன. இவற்றுள் 1000 துளைகளைக் கொண்ட சல்லடை மிகச் சிறைய துளைகளைக் கொண்டது. 1000 துளைகளைக் கொண்ட சல்லடையில் தொடங்கி 20 துளைகளைக் கொண்ட சல்லடை வரை ஒன்றன்பின் ஒன்றாகப் பயன்படுத்தி அரித்து முத்துக்களைப் 10 வகையாகப் பிரிக்க முடியும். இச்சல்லடைகள் மூன்று வகைளாகப் பிரிக்கப்பட்டுப் பெயரிடப்பட்டிருந்தன.[3]
முத்துக்களின் தரத்துக்கான இன்னொரு அளவீடு அவற்றின் செவ்வியத் தன்மை. இது இரண்டு தன்மைகளில் தங்கியுள்ளது. ஒன்று வடிவம். முத்துக்களைப் பொறுத்தவரை இது அவற்றின் கோளத் தன்மை ஆகும். அடுத்தது, வெள்ளி போன்ற மினுக்கம். இந்த இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு முத்துக்கள் வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றின் பெயர்களும், விளக்கமும் வருமாறு:[4]
முத்துக்களின் பெறுமதியை அறிவதற்கு அவற்றில் எடையை அளப்பது முக்கியமானது. இலங்கையில் முத்துக்கள் பின்வரும் அலகுகளில் அளக்கப்பட்டன:[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.