இருசிறகிப் பூச்சிகள்
From Wikipedia, the free encyclopedia
இருசிறகிகள் அல்லது ஈ-கொசு வரிசை என்னும் உயிரினங்கள், உயிரியல் வகைப்பாட்டில் டிப்டெரா அல்லது டைப்டெரா (Diptera) என்று அழைக்கப்படுகின்றது. இவை இரண்டு இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சிகள் வரிசையைச் சேர்ந்த உயிரினங்கள் ஆகும். உயிரியற் பெயராகிய டிப்டெரா அல்லது டைப்டெரா என்பது, di (டை) = இரண்டு, pteron (ப்டெரான்)= இறக்கை, ஆகிய இரண்டுசொற்களின் கூட்டாக உருவான பெயர். இதனைத் தமிழில் இருசிறகிகள் என்று அழைக்கிறோம். இவ் உயிரின வரிசையின் சிறப்புப் பண்புகளில் சில: ஒரேயொரு இறக்கை இணை (இரண்டு இறக்கைகள்) கொண்டுள்ளது, இவற்றின் வாய் அமைப்பு பெரும்பாலும் உறிஞ்சும் அமைப்பு கொண்டதாகவும், ஒரு சிலவற்றில் துளைக்கவோ, கடிக்கவோ ஏற்ற அமைப்பு கொண்டதாகவும் உள்ளன, இவ் இறக்கைகள் (சிறகுகள்), இவ் உயிரியின் முப்பகுப்பான உடலின் நடுப்பகுதில் (மேசோதோராக்ஃசில்) அமைதுள்ளன, உடலில் கடைப்பகுதியில் (மேட்டாதொராக்ஃசில்) பின் இரண்டு இறக்கைகளுக்கு மாறாக, பறக்கும் பொழுது நடுமையை உணரவும், விரைவு முடுக்கத்தை உணரவும் ஏற்ற முடுக்குணர்விகள் அல்லது நிலைப்படுத்திகள் (Halteres, ஆல்ட்டெரீசு) அமைந்துள்ளன.
இருசிறகிப் பூச்சிகள் ஈ-கொசு வரிசை உயிரிகள் புதைப்படிவ காலம்:245–0 Ma Middle Triassic - Recent | |
---|---|
16 வெவ்வேறு ஈக்களையும் கொசுக்களையும் காட்டும் படம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | சிறகிகள் இப்டெரிகோட்டா (Pterygota) |
உள்வகுப்பு: | முழுவீச்சு சிறகிகள் Neoptera |
பெருவரிசை: | அகவளர்ச்சி சிறகிகள் Endopterygota |
வரிசை: | இருசிறகிகள் (டிப்டெரா, Diptera) லின்னேயசு, 1758 |
Suborders | |
Nematocera (includes Eudiptera) |