From Wikipedia, the free encyclopedia
ரியோ டி ஜெனீரோ (போர்த்துக்கீசிசம்: Rio de Janeiro, அல்லது "தை மாதத்தின் ஆறு") பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் ரியோ டி ஜெனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.
ரியோ டி ஜெனீரோ | |
---|---|
அடைபெயர்(கள்): Cidade Maravilhosa ("உயர்ந்த நகரம்"), "ரியோ" | |
ரியோ டி ஜெனீரோவின் அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
பகுதி | தென்கிழக்கு |
மாநிலம் | ரியோ டி ஜெனீரோ |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | சேசார் மாயா (மக்களாட்சி) |
பரப்பளவு | |
• நகரம் | 1,260 km2 (490 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 60,93,472 |
• அடர்த்தி | 4,781/km2 (12,380/sq mi) |
• பெருநகர் | 1,17,14,000 |
நேர வலயம் | ஒசநே-3 (UTC-3) |
• கோடை (பசேநே) | ஒசநே-2 (UTC-2) |
ம.வ.சு. (2000) | 0.842 – உயர் |
இணையதளம் | ரியோ டி ஜெனீரோ நகரம் |
நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'ரியோ' என்கிறார்கள்.
பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.
ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு , இந்நகரத்தின் ஒரு பகுதியை உலகக் கலாச்சார மையமாக அறிவித்தது.
2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தப் போட்டியிட்டதில் இறுதிச் சுற்றில் ரியோ டி ஜெனீரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரைத் தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.[1]
ரியோ டி ஜெனீரோ, பிரேசிலின் அட்லாண்டிக் பெருங்கடலின் முகட்டில் அமைந்துள்ளது. மேலும் மகர ரேகைக்கு அருகில் உள்ளது.
ரியோ டி ஜெனீரோ, வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை இங்கு மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45 °C க்கு அதிகமாகவும் 25 °C க்கு குறையாமலும் இருக்கும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், ரியோ டி ஜெனீரோ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 43 (109) |
42 (108) |
40 (104) |
40 (104) |
38 (100) |
38 (100) |
37 (99) |
42 (108) |
42 (108) |
42 (108) |
43 (109) |
43 (109) |
43 (109) |
உயர் சராசரி °C (°F) | 29.4 (84.9) |
30.2 (86.4) |
29.4 (84.9) |
27.8 (82) |
26.4 (79.5) |
25.2 (77.4) |
25.3 (77.5) |
25.6 (78.1) |
25.0 (77) |
26.0 (78.8) |
27.4 (81.3) |
28.6 (83.5) |
27.2 (81) |
தினசரி சராசரி °C (°F) | 26.2 (79.2) |
26.5 (79.7) |
26.0 (78.8) |
24.5 (76.1) |
23.0 (73.4) |
21.5 (70.7) |
21.3 (70.3) |
21.8 (71.2) |
21.8 (71.2) |
22.8 (73) |
24.2 (75.6) |
25.2 (77.4) |
23.7 (74.7) |
தாழ் சராசரி °C (°F) | 23.3 (73.9) |
23.5 (74.3) |
23.3 (73.9) |
21.9 (71.4) |
20.4 (68.7) |
19.7 (67.5) |
19.4 (66.9) |
19.2 (66.6) |
19.6 (67.3) |
20.2 (68.4) |
21.4 (70.5) |
22.4 (72.3) |
21.2 (70.2) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 18 (64) |
18 (64) |
17 (63) |
15 (59) |
11 (52) |
7 (45) |
8 (46) |
10 (50) |
13 (55) |
12 (54) |
12 (54) |
17 (63) |
7 (45) |
மழைப்பொழிவுmm (inches) | 114.1 (4.492) |
105.3 (4.146) |
103.3 (4.067) |
137.4 (5.409) |
85.6 (3.37) |
80.4 (3.165) |
56.4 (2.22) |
50.5 (1.988) |
87.1 (3.429) |
88.2 (3.472) |
95.6 (3.764) |
169.0 (6.654) |
1,172.9 (46.177) |
% ஈரப்பதம் | 73 | 72 | 75 | 77 | 76 | 74 | 73 | 73 | 75 | 74 | 73 | 74 | 74 |
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) | 12 | 9 | 12 | 10 | 8 | 6 | 6 | 6 | 9 | 10 | 11 | 13 | 112 |
சூரியஒளி நேரம் | 195.3 | 209.1 | 195.3 | 165.0 | 170.5 | 156.0 | 182.9 | 179.8 | 138.0 | 158.1 | 168.0 | 161.2 | 2,079.2 |
Source #1: World Meteorological Organization (UN),[2]Hong Kong Observatory[3] | |||||||||||||
Source #2: Weatherbase (record highs and lows, humidity)[4] |
Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec | Year |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
25 °C (77 °F) | 26 °C (79 °F) | 26 °C (79 °F) | 25 °C (77 °F) | 24 °C (75 °F) | 23 °C (73 °F) | 22 °C (72 °F) | 22 °C (72 °F) | 22 °C (72 °F) | 22 °C (72 °F) | 23 °C (73 °F) | 25 °C (77 °F) | 24 °C (75 °F) |
2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5,940,224 பேர் வசிக்கின்றனர்.
ரியோ டி ஜெனீரோவின் மக்கட்தொகையில் மாற்றங்கள் [5]
இந்நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர். இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர். இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.
இந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது.
மதம் | சதவிகிதம் | மக்கள் |
கத்தோலிக்கம் | 51.09% | 3,229,192 |
ஆங்கிரசம் | 23.37% | 1,477,021 |
இறைமறுப்பு | 13.59% | 858,704 |
மனஎழுச்சி - தன்னூக்கம் | 5.90% | 372,851 |
உம்பண்டா & கண்டோம்பளே | 1.29% | 72,946 |
யூதம் | 0.34% | 21,800 |
Source: IBGE 2010.[6] |
இந்நகரில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.
இந்நகரத்தில், புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையென இரண்டும் உள்ளது. மேலும் பேருந்துச் சேவையும் உள்ளது.
இந்நகரம் அட்லாண்டிக் கடலோரம் இருப்பதால் உலகின் பல கடற்கரை நகரங்களில் இருந்து இந்நகருக்குச் சொகுசுக் கப்பல்கள் வந்து செல்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.