இராமபாணப் பூச்சி
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
இராமபாணப் பூச்சி (Silver Fish) என்பது சிறிய தட்டையான உடலுடைய, இறக்கையற்ற பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். இந்தவகைப் பூச்சிகள் சைசினோட்டா வரிசையினைச் சார்ந்தவையாகும்.[1] இந்த வகைப் பூச்சிகள் உடல் வெண்மையான, வெள்ளி போன்ற பளபளக்கும் செதில்களால் மூடப்பட்டிருப்பதாலும், விரைவாக இடம் பெயர்ந்து செல்வதாலும் ,இது வெள்ளிமீன் என்று அழைக்கப்படுகிறது.[2] பூச்சி வளர்ந்தததும் சாம்பல் நிறமாகும். இரவாடி வகையினைச் சார்ந்த இந்த பூச்சிகள், ஒளிபடாத இடங்களில் ஒளிந்து கொண்டு சுவடிகள், புத்தகம் மற்றும் துணியில் உள்ள மாவுப் பொருளை மென்று தின்று சேதமாக்க துளைத்து விடுகின்றன.[3] இதனால் இவற்றை எழுத்தாணி பூச்சி என்றும் குறிப்பிடுவர். இவை இரவாடுதல் இயல்புடையவை, மேலும் இருண்ட குளிர்ச்சியான இடங்களில் காணப்படுகின்றன. ஏறத்தாழ 1 செ.மீ. உடல் நீளமுடையவை. இவற்றின் உணர் கொம்புகளும், வால் நீட்சிகளும் உடலை விட அளவில் குறைந்தவை. ஆண், பெண் பூச்சிகள் அளவில் ஒத்தவை. நாப்தலீன் உருண்டைகளை போட்டு வைத்து இந்த பூச்சியை விரட்டலாம்.[4]
இராமபாணப் பூச்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஜிகெண்டோமா |
குடும்பம்: | லெபிஸ்மாடிடே |
பேரினம்: | லெப்பிசுமா |
இனம்: | லெ. சக்காரினம் |
இருசொற் பெயரீடு | |
லெப்பிசுமா சக்காரினம் லின்னேயசு, 1758 | |