From Wikipedia, the free encyclopedia
இராபர்ட் பித்சோ (Robert Fico, ˈrɔbert ˈfitsɔ); பிறப்பு: 15 செப்டம்பர் 1964) என்பவர் சிலோவாக்கிய அரசியல்வாதி ஆவார். இவர் 2023 முதல் சிலோவாக்கியாவின் பிரதமராகப் பதவியில் உள்ளார். முன்னதாக இவர் 2006 முதல் 2010 வரையும், பின்னர் 2012 முதல் 2018 வரையும் பிரதமராகப் வகித்திருந்தார். இவர் 1999 இல் திசை-சமூக சனநாயகக் கட்சியை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். 1992 இல் சிலோவாக்கிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இவர், அடுத்த ஆண்டில் ஐரோப்பியப் பேரவைக்கான செக்கோசிலோவாக்கிய நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது கட்சி 2006 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இவர் தனது முதலாவது அமைச்சரவையை அமைத்தார். இவரது அரசியல் நிலைப்பாடுகள் இவரை ஒரு பெருந்திரள்வாதியாகப் பார்க்கிறது.
இராபர்ட் பித்சோ Robert Fico | |
---|---|
2024 ஏப்பிரலில் பித்சோ | |
சிலோவாக்கியாவின் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 அக்டோபர் 2023 | |
குடியரசுத் தலைவர் | சூசானா கபுட்டோவா பீட்டர் பெலெகிரினி (தெரிவு) |
முன்னையவர் | லுதோவித் ஓடர் |
பதவியில் 4 ஏப்பிரல் 2012 – 22 மார்ச் 2018 | |
குடியரசுத் தலைவர் | இவான் காசுபரோவிச் அந்திரேய் கீசுக்கா |
முன்னையவர் | இவேத்தா இரதிச்சோவா |
பின்னவர் | பீட்டர் பெலெகிரினி |
பதவியில் 4 சூலை 2006 – 8 சூலை 2010 | |
குடியரசுத் தலைவர் | இவான் காசுபரோவிச் |
முன்னையவர் | மிக்குலாசு சுரிந்தா |
பின்னவர் | இவெத்தா இரதிச்சோவா |
நீதித்துறை அமைச்சர் | |
பதவியில் 26 மார்ச் 2009 – 3 சூலை 2009 | |
துணை அவைத்தலைவர், தேசியப் பேரவை | |
பதவியில் 9 சூலை 2010 – 4 ஏப்பிரல் 2012 | |
அவைத்தலைவர் | இரிச்சார்டு சூலிக் பவோல் ருசோவ்சுக்கி |
தேசியப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 22 மார்ச் 2018 – 25 அக்டோபர் 2023 | |
பதவியில் 8 சூலை 2010 – 4 ஏப்பிரல் 2012 | |
பதவியில் 23 சூன் 1992 – 4 சூலை 2006 | |
திசை-சமூக சனநாயகக் கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 நவம்பர் 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1964 தப்போல்ச்சனி, செக்கோசிலோவாக்கியா (இன்றைய சிலோவாக்கியா) |
அரசியல் கட்சி | சமூக சனநாயகக் கட்சி (1999 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | செக்கோசிலோவாக்கியா பொதுவுடமைக் கட்சி (1986–1990) இடது சனநாயகக் கட்சி (1990–1999) |
துணைவர் | சிவெத்லானா சுவபோதவா (தி. 1986) |
பிள்ளைகள் | 1 |
முன்னாள் கல்லூரி | கொமேனியசு பல்கலைக்கழகம் (முனைவர், சட்டம்) சிலோவாக் அறிவியல் அகாதமி |
கையெழுத்து | |
2010 நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து, பித்சோ எதிர்க்கட்சித் தலைவரானார். இவேத்தா இரதிச்சோவாவின் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் பித்சோவின் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இரண்டாவது தடவையாகப் பிரதமரானார். [1] 2014 அரசுத்தலைவர் தேர்தலில் பித்சோ போட்டியிட்டு அந்திரேய் கீசுக்காவிடம் தோற்றார்.[2] 2018 மார்ச்சில், ஊடகவியலாளர் ஜான் குசியாக் என்பவரின் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக, பித்சோ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[3][4]
2023 நாடாளுமன்றத் தேர்தலின் போது, சிலோவாக்கியாவின் அண்டை நாடான உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை நிறுத்துவதாக பித்சோ பரப்புரை செய்தார்.[5][6] இவரது கட்சி 42 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.[7] பித்சோ 2020 இல் சிலோவாக் தேசியக் கட்சி, குரல் - சமூக சனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, 2020 அக்டோபர் 25 அன்று நான்காவது முறையாகப் பிரதமராக பதவியேற்றார். பித்சோவின் அரசாங்கம் உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது,[8] ஊடகத்தின் மீது அதிகக் கட்டுப்பாட்டை விதித்தது, மேலும் ஊழலைக் கையாளும் சிறப்பு வழக்குரைஞர் அலுவலகத்தை மூடியது.[9] இந்த நகர்வுகள் மக்களின் எதிர்ப்புகளைத் தூண்டின.[10]
2024 மே 15 அன்று, பித்சோ மீது நடந்த ஒரு படுகொலை முயற்சியில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[11][12] அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.[13][14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.