From Wikipedia, the free encyclopedia
இராஜபுதனம் அல்லது இராஜபுதனா (Rājputāna) (இந்தி: राजपूताना) என்பதற்கு இராஜபுத்திரர்களின் நிலம் எனப்பொருளாகும்.[1] பிரித்தானிய இந்தியாவில் இராஜபுதனத்தின் நிலப்பரப்புகள், தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் மற்றும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளையும் மற்றும் பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்துவையும் கொண்டிருந்தது. [2]
மத்தியகால இந்தியாவில் ஆரவல்லி மலைகளுக்கு மேற்கே உள்ள நிலப்பரப்புகள் இராஜபுதனம் என அறியப்பட்டது.[3]
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதிகள் இராஜபுதனம் முகமையின் கீழ் செயல்பட்டது.[4]இராஜபுதனம் முகமை பகுதிகளை, 18 இராஜபுத்திர குல வம்சத்தின் சுதேச சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் செலுத்தி ஆண்டனர். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948ல் சிந்து தவிர, இராஜபுதனத்தின் அனைத்துப் பகுதிகள் இந்திய அரசுடன் இணைந்தது.
ஜார்ஜ் தாமஸ் எனும் பிரித்தானிய படைத்தலைவர் 1,800ல் இப்பகுதிக்கு இராஜபுதனம் முகமை என பெயரிட்டார். [5]
மத்திய கால இந்திய வரலாற்றில் இராஜபுதனம் என அழைக்கப்பட்ட பகுதிக்கு, பண்டையக் காலப் பெயர் கூர்ஜரம் எனப் பெயர் கொண்டது. [6] [7]
3,43,328 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராஜபுதனத்தின் புவியியல் இரண்டு புவியியல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.