From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் ( Second Anglo-Afghan War) (பஷ்தூ: د افغان-انګرېز دويمه جګړه), பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளுக்கும், ஆப்கானித்தான் அமீர், செர் அலி கான் படைகளுக்கும் இடையே 1878 முதல் 1880 முடிய ஆப்கானித்தானில் நடைபெற்ற போராகும்.
இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெரும் விளையாட்டின் ஒரு பகுதி | |||||||
92nd Highlanders at Kandahar. Oil by Richard Caton Woodville Jr. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஆப்கானின் அமீரகம் | பிரித்தானியா | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
| |||||||
இழப்புகள் | |||||||
5,000+ போரில் கொல்லப்பட்டனர் மொத்தமாக பலியானர்கள் விவரம் அறியப்படவில்லை [6] | 1,850 போரில் கொல்லப்பட்டனர் 8,000 நோயால் இறந்தனர்[6] |
இப்போர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி படைகள், ஆப்கானித்தானை கைப்பற்றுவதற்கு நடைபெற்ற இரண்டாவது போராகும். இரண்டாம் ஆங்கிலேய ஆப்கான் போர், ஆங்கிலேயர்களின் வெற்றியுடன் முடிவுற்றது. கந்தமாக் உடன்படிக்கையின் படி, ஆங்கிலேயர்கள் ஆப்கானித்தானில் புவிசார் அரசியல் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆப்கானித்தானிலிருந்து பெரும்பாலான பிரித்தானியக் கம்பெனிப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆப்கானிய பஷ்தூன் பழங்குடி மக்கள் தங்கள் மலைப்பகுதிகளை தன்னாட்சியுடன் நிர்வகிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும் ருசியா மற்றும் பிரித்தானிய இந்தியாவுக்குமிடையே போர் அமைதி மண்டலமாக இருப்பதற்கு ஆப்கானித்தான் ஒப்புக்கொண்டது.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.