இரண்டாம் அக்மோஸ்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் அக்மோஸ் (Amasis II or Ahmose II)[2] பண்டைய எகிப்தின் பிந்தைய கால இராச்சியத்தை கிமு 570 முதல் கிமு 526 வரை ஆண்ட இருபத்தி ஆறாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவார். இவர் கீழ் எகிப்தின் சைஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு ஆட்சி செய்தார். இவருக்குப் பின் பண்டைய எகிப்து, பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் கீழ் சென்றது.[3]
விரைவான உண்மைகள் இரண்டாம் அக்மோஸ் அல்லது இரண்டாம் அமாசிஸ், எகிப்தின் பாரோ ...
இரண்டாம் அக்மோஸ் அல்லது இரண்டாம் அமாசிஸ் | |
---|---|
Ahmose II | |
இரண்டாம் அக்மோசின் தலைச்சிற்பம், ஆண்டு கிமு 550 | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 570–526, எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் |
முன்னவர் | ஏப்பிரிஸ் |
பின்னவர் | மூன்றாம் சாம்திக் |
துணைவி(யர்) | டென்கெட்டா |
பிள்ளைகள் | மூன்றாம் சாம்திக் |
தாய் | தஷ்ரெனிசெத் |
இறப்பு | கிமு 526 |
மூடு