![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Botticelli%252C_annunciazione_di_cestello_02.jpg/640px-Botticelli%252C_annunciazione_di_cestello_02.jpg&w=640&q=50)
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (பொட்டிச்செல்லி)
From Wikipedia, the free encyclopedia
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (The Annunciation) என்பது சாண்ட்ரோ பொட்டிச்செல்லி என்னும் இத்தாலிய ஓவியரால் 1489-1490 ஆண்டுகளில் வரையப்பட்ட பசைக்கலவை ஓவியம் ஆகும். இது 1978இல் பழுதுபார்க்கப்பட்டு, தற்போது இத்தாலியின் புளோரன்சு நகரத்தில் உஃப்ஃபீசி (Uffici) கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விரைவான உண்மைகள் இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு The Annunciation, ஓவியர் ...
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு The Annunciation | |
---|---|
![]() | |
ஓவியர் | சாண்ட்ரோ பொட்டிச்செல்லி Sandro Botticelli |
ஆண்டு | 1489-1490 |
வகை | பலகைமேல் பசைக்கலவை ஓவியம் |
இடம் | உஃப்ஃபீசி (Uffizi), புளோரன்சு, இத்தாலியா |
மூடு
பொட்டிச்செல்லி (சுமார் 1445-1510) கிறித்தவ சமயம் சார்ந்த பல ஓவியங்களையும் பிற பொருள்கள் பற்றிய ஓவியங்களையும் வரைந்து புகழ்பெற்றுள்ளார்[1]
இதன் சிறப்புக் கூறுகள்:
- ஓவியத்தில் சித்தரிக்கப்படும் தளம் விரிந்துசெல்லும் கோணத்தில் அமைந்துள்ளது.
- ஓவியத்தின் பின்புல நிலக்காட்சியின் எழில்.
- ஓவியத்தில் சித்தரிக்கப்படுகின்ற நபர்களின் தனிச்சிறப்பான உடல் நிலையமைப்பு.