இமயமலை காடை
From Wikipedia, the free encyclopedia
இமயமலை காடை (Himalayan quail)(ஓப்ரிசியா சூப்பர்சிலியோசா) அல்லது மலை காடை, என்பது பெசன்ட் குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான காடை சிற்றினம் ஆகும். இது கடைசியாக 1876-ல் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அழிந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. இந்த சிற்றினம் வடமேற்கு இந்தியாவின் உத்தராகண்டத்தில் மேற்கு இமயமலையில் உள்ள 2 இடங்களில் (12 மாதிரிகள்) மட்டுமே அறியப்பட்டது. கடைசியாகச் சரிபார்க்கக்கூடிய பதிவு 1876-ல் முசோரியின் மலைப்பகுதிக்கு அருகில் காணப்பட்டது.
விரைவான உண்மைகள் இமயமலை காடை Himalayan quail, காப்பு நிலை ...
இமயமலை காடை Himalayan quail | |
---|---|
![]() | |
டெர்பி அருங்காட்சியகத்தில் (இப்போது உலக அருங்காட்சியகம்) (நைனிடாலில் 1 ஏப்ரல் 1836 அன்று ஆணும் பெண்ணும்) உள்ள மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு ஜான் கோல்ட் வரைந்த ஓவியம். இவை வகை மாதிரிகள் (டி259 மற்றும் டி259a). | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கல்லிபார்ம்சு |
குடும்பம்: | பெசினிடே |
பேரினம்: | ஓப்ரிசியா |
இனம்: | ஓ. சூப்பர்சிலியோசா |
இருசொற் பெயரீடு | |
ஓப்ரிசியா சூப்பர்சிலியோசா (கிரே, 1846) | |
![]() | |
வேறு பெயர்கள் | |
ரோலுலுசௌ சூப்பர்சிலியோசா |
மூடு