இமயமலை கருப்புக் கரடி
பாலூட்டிகளின் துணை இனம் / From Wikipedia, the free encyclopedia
இமயமலை கருப்புக் கரடி (Himalayan black bear) என்பது திபெத், நேபாளம், சீனா பாக்கித்தான் மற்றும் இந்திய இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஆசிய கருப்புக் கரடியின் துணையினம் ஆகும்.
இமயமலை கருப்புக் கரடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகெலும்புள்ளவை |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | மாமிச உண்ணி |
குடும்பம்: | உர்சிடே |
பேரினம்: | உர்சசு |
இனம்: | யு. தைபெட்டானசு' |
துணையினம்: | யு. டி. லானிகர் |
முச்சொற் பெயரீடு | |
உர்சசு தைபெட்டானசு லானிகர் போகாக்கு, 1932 | |
வேறு பெயர்கள் | |
நீளமான, அடர்த்தியான மென் முடிகளும் மற்றும் சிறிய வெள்ளை நெஞ்சு குறியும் [2] இவற்றை ஆசிய கருப்புக் கரடிகளிடமிருந்து வேறுபடுத்துகின்றன. நேபாளம், சீனா, உருசியா மற்றும் திபெத்தின் 10,000 முதல் 12,000 அடி உயரமுள்ள வெப்பமான இடங்களில் கோடைக்காலங்களில் இமயமலை கருப்புக் கரடிகளை காணமுடியும். குளிர் காலத்திற்காக இக்கரடிகள் 5,000 அடி வரை வெப்பமண்டலக் காடுகளை நோக்கி கீழிறங்கி வந்துவிடுகின்றன. சராசரியாக இமயமலை கருப்புக் கரடிகளின் உடலானது மூக்கிலிருந்து வால் வரை 140 முதல் 170 சென்டிமீட்டர் நீளம் கொண்டுள்ளது. மேலும், இவற்றின் உடல் 91 கிலோ முதல் 120 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது. குளிர்காலத்தை தூங்கிக் கழிக்கும்போது இவ்வகைக் கரடிகள் கொழுப்பு மிகுந்து சுமார் 180 கிலோ எடை வரைக்கும் கூட இருப்பதுண்டு [3].