இன்சைட்
From Wikipedia, the free encyclopedia
இன்சைட் (InSight) என்பது அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பினால் செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலமாகும். இந்த தானியங்கி விண்கலம் 27.11.2018 அன்று திங்கட்கிழமை காலை 01.30 மணியளவில் செவ்வாயில் தரையிறங்கியது.[11] இவ்விண்கலம் செவ்வாய்க் கோளின் மத்திய ரேகைக்கு அருகில் உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கியது.[12] இந்த தானியங்கி விண்கலமானது லாக்கீட் மார்ட்டின் விண்வெளி அமைப்புகள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்த தானியங்கி விண்கலம் நாசாவின் தாரை செலுத்த ஆய்வகத்தால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. இதன் இயக்கமானது 2018 மே 5 ஆம் நாள் தொடங்கியது. அட்லஸ் 5 - 401 என்ற இராக்கெட் மூலம் இந்த தானியங்கி விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது. 2018 நவம்பர் 26 அன்று ஒசநே 19:52:59 அளவில் செவ்வாயில் தரை இறங்கியது.[13][14] இன்சைட் தனது பயணத்தில் 483 மில்லியன் கிலோமீட்டர் (300 மில்லியன் மைல்கள்) தூரத்தைக் கடந்துள்ளது.[15]
திட்ட வகை | செவ்வாய் தரையிறங்கி | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயக்குபவர் | நாசா / ஜேபிஎல் | ||||||||||
காஸ்பார் குறியீடு | 2018-042A | ||||||||||
சாட்காட் இல. | 43457 | ||||||||||
இணையதளம் | Mars.NASA.gov/InSight | ||||||||||
திட்டக் காலம் | திட்டம்: 709 சொல்கள் (2 ஆண்டுகள்)[1][2] தற்போது: தரையிறங்கிய நாளில் இருந்து 1936 சொல்கள் | ||||||||||
விண்கலத்தின் பண்புகள் | |||||||||||
தயாரிப்பு | லாக்கீது மார்ட்டின் | ||||||||||
ஏவல் திணிவு | 694 kg (1,530 lb)[3] | ||||||||||
Landing mass | 358 kg (789 lb)[3] | ||||||||||
பரிமாணங்கள் | அனுப்பும் போது: 6.0 × 1.56 × 1.0 m (19.7 × 5.1 × 3.3 அடி)[4]- | ||||||||||
திறன் | 600 W, சூரிய / Li-அயனி மின்கலம்[3] | ||||||||||
திட்ட ஆரம்பம் | |||||||||||
ஏவப்பட்ட நாள் | 5 மே 2018, 11:05 ஒசநே[5][6] | ||||||||||
ஏவுகலன் | அட்லஸ் 5 401[7] | ||||||||||
ஏவலிடம் | வான்டன்பர்க் SLC-3E[7] | ||||||||||
செவ்வாய் தரையிறங்கி | |||||||||||
தரையிறங்கிய நாள் | 26 நவம்பர் 2018, 19:52:59 ஒசநே[2] | ||||||||||
தரையிறங்கிய பகுதி | எலிசியம் பிளானித்தியா[8][9] 4.5°N 135.0°E / 4.5; 135.0 (InSight landing site) | ||||||||||
செவ்வாய்-ஐ அணுகல் | |||||||||||
விண்கலப் பகுதி | செவ்வாய் கியூப் ஒன்று (MarCO) | ||||||||||
மிகக்கிட்டவான அணுகல் | 26 நவம்பர் 2018, 19:52:59 ஒசநே[2] | ||||||||||
தூரம் | 3,500 km (2,200 mi)[10] | ||||||||||
| |||||||||||
|
செவ்வாயின் மேற்பரப்பில் SEIS என்றழைக்கப்படும் நிலநடுக்கமானி ஒன்றை வைத்தல், செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தின் துல்லியமான முப்பரிமாண மாதிரிகள் வழங்குவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்துதல், கோளின் உட்புறத்தில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றத்தை எச்பி3 எனப்படும் ஒரு வெப்பத்தை ஊடுருவி ஆராயும் முறையின் மூலம் அளந்து அதனை வைத்து செவ்வாயின் தொடக்க கால நிலவியல் பரிணாமத்தைப் பற்றி படிப்பது ஆகியவை இன்சைட் தானியங்கி விண்கலம் ஏவப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களாகும்.[16]