![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e8/MP_Indore_district_map.svg/langta-640px-MP_Indore_district_map.svg.png&w=640&q=50)
இந்தோர் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இந்தோர் மாவட்டம் (Indore District) (இந்தி: इन्दौर जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் இந்தோர் ஆகும். இம்மாவட்டம் இந்தோர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட்டத்தின் பகுதிகள் 1948 வரை இந்தூர் அரசு ஆண்டது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() இந்தோர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | இந்தூர் கோட்டம் |
தலைமையகம் | இந்தூர் |
பரப்பு | 3,898 km2 (1,505 sq mi) |
மக்கட்தொகை | 3,276,697 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 841/km2 (2,180/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 74.09% |
படிப்பறிவு | 80.87% |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | இந்தோர் மற்றும் தார் நாடாளுமன்ற தொகுதிகள் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 9 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
மத்தியப் பிரதேசத்தின் ஐம்பத்தி ஒன்று மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை மாவட்டமாக இந்தோர் மாவட்டம் விளங்குகிறது.[1]
இம்மாவட்டத்தின் டாக்டர். அம்பேத்கர் (பழைய பெயர்:மாவ்) நகரத்தில் மாவ் இராணுவப் பொதுப் பள்ளி, இராணுவப் போர்க் கல்லூரி மற்றும் இராணுவத் தகவல் தொடர்பு பொறியியல் கல்லூரி உள்ளது.