From Wikipedia, the free encyclopedia
இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடம் (Indian Military Academy) (IMA) இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனம் ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரத்தில், 1932 இல் இந்த இராணுவ அகாதமி 1,400 ஏக்கர்கள் (5.7 km²) பரப்பளவில் நிறுவப்பட்டது. தற்போது இந்த இராண்வ அகாதாமியில் ஆண்டிற்கு 1,650 மாணவப்படையினர் இராணுவப் பயிற்சி பெறுகின்றனர். இங்கு பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தின் தரைப்படையில் லெப்டினன்ட் எனும் இராணுவ அதிகாரி பதவி வழங்கப்படுகிறது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
குறிக்கோளுரை | वीरता और विवेक வீரம் மற்றும் விவேகம் [1] |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Valour and Wisdom[1] |
வகை | படைத்துறைக் கல்விக்கூடம் |
உருவாக்கம் | 1 October 1932 |
பொறுப்பாளர் | கட்டளை அதிகாரி, லெப். ஜெனரல் |
மாணவர்கள் | 1,650 |
அமைவிடம் | , , இந்தியா 30.332041°N 77.980933°E |
வளாகம் | 1,400 ஏக்கர்கள் (5.7 km²) |
நிறங்கள் | இரத்த சிவப்பு மற்றும் எஃகு கிரே |
இந்திய இராணுவ அகாதமியில் படித்த முன்னாள் மாணவர்களில், முதன் முதலாக பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர் சோம்நாத் சர்மா ஆவார். மேலும் இந்த அகாதாமியில் படித்த சாம் மானேக்சா இந்திய இராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் பதவியைப் பெற்றவர் ஆவார். இந்த அகாதமியில் படித்தவர்களில் 17 இந்திய இராணுவ அதிகாரிகள் அசோகச் சக்கரமும், 84 பேர் மகா வீர் சக்கரமும், 41 பேர் கீர்த்தி சக்கரமும், 73 பேர் மிலிட்டரி கிராஸ் விருதுகளை பெற்றுள்ளனர். மேலும் இந்த அகாதமியில் பயின்றவர்கள் இராணுவ ஜெனரல்களாகவும், அரசியல்வாதிகளாக உள்ளனர். இந்த அகாதாமியில் ஆப்கானித்தான், சிங்கப்ப்பூர், சாம்பியா, மலேசியா போன்ற வெளிநாட்டு மாணவர்களும் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்திய இராணுவ அகாதமி படித்த முன்னாள் மாணவரான சாம் மானேக்சா இந்திய இராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் எனும் உயர்ந்த பதவியை வகித்தவர். மேலும் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கர விருதினை இது வரை நான்கு பேர் பெற்றுள்ளனர். அவர்கள்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.