From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.
இந்தியா குடியரசுத் துணைத் தலைவர் | |
---|---|
வாழுமிடம் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், புது தில்லி |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள், புதுப்பிக்கவல்லது |
முதலாவதாக பதவியேற்றவர் | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மே 13, 1952 முதல் மே 12, 1962 வரை |
இறுதியாக | வெங்கையா நாயுடு |
ஊதியம் | ₹ 1,25,000 ($ 2808) ஒரு மாதத்திற்கு |
இணையதளம் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் (ஆங்கில மொழியில்) |
இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.
குடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.
ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.[1]ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றி பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.
துணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள்.[2]
எண். | குடியரத் துணைத் தலைவர் | படம் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | குடியரசுத் தலைவர் |
---|---|---|---|---|---|
1 | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | 13 மே 1952 | 12 மே 1962 | ராசேந்திர பிரசாத் | |
2 | சாகீர் உசேன் | 13 மே 1962 | 12 மே 1967 | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |
3 | வரதாகிரி வெங்கட்ட கிரி | 13 மே 1967 | 3 மே 1969 | சாகீர் உசேன் | |
4 | கோபால் சுவரூப் பதக் | 31 ஆகத்து 1969 | 30 ஆகத்து 1974 | வி. வி. கிரி | |
5 | பசப்பா தனப்பா ஜாட்டி | 31 ஆகத்து 1974 | 30 ஆகத்து 1979 | பக்ருதின் அலி அகமது | |
6 | முகம்மது இதயத்துல்லா | 31 ஆகத்து 1979 | 30 ஆகத்து 1984 | நீலம் சஞ்சீவ ரெட்டி | |
7 | இராமசாமி வெங்கட்ராமன் | 31 ஆகத்து 1984 | 27 சூலை 1987 | ஜெயில் சிங் | |
8 | சங்கர் தயாள் சர்மா | 3 செப்டம்பர் 1987 | 24 சூலை 1992 | ஆர். வெங்கட்ராமன் | |
9 | கோச்செரில் ராமன் நாராயணன் | 21 ஆகத்து 1992 | 24 சூலை 1997 | சங்கர் தயாள் சர்மா | |
10[3] | கிருஷ்ண காந்த் | 21 ஆகத்து 1997 | 27 சூலை 2002 | கே. ஆர். நாராயணன் | |
11 | பைரோன் சிங் செகாவத் | 19 ஆகத்து 2002 | 21 சூலை 2007 | ஏ. பி. ஜே. அப்துல் கலாம் | |
12 | முகம்மது அமீத் அன்சாரி[4] | 11 ஆகத்து 2007 | 10 ஆகத்து 2012 | பிரதீபா பாட்டீல் | |
(12) | முகம்மது அமீத் அன்சாரி[4] | 11 ஆகத்து 2012 | 11 ஆகத்து 2017 | பிரணாப் முகர்ஜி | |
13 | வெங்கையா நாயுடு | 11 ஆகத்து 2017 | 11
ஆகத்து 2022 |
ராம் நாத் கோவிந்த் | |
14 | ஜெகதீப் தன்கர் | 11 ஆகத்து 2022 | தற்போது | திரௌபதி முர்மு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.