Remove ads
சைவ சமய 63 நாயன்மார்களில், 3 பெண் நாயன்மார்களில், 'ஆதிசைவர்' குலத்தைச் சேர்ந்தவர். From Wikipedia, the free encyclopedia
இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார்[1][2][3]. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
இசைஞானியார் நாயனார் | |
---|---|
பெயர்: | இசைஞானியார் நாயனார் |
குலம்: | ஆதி சைவர் |
பூசை நாள்: | சித்திரை சித்திரை |
அவதாரத் தலம்: | ஆரூர் (கமலாபுரம்) |
முக்தித் தலம்: | திருநாவலூர் |
திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.
இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.