இசுலாமியப் பகுதி
From Wikipedia, the free encyclopedia
இசுலாமியப் பகுதி (அரபு மொழி: حارة المسلمين; எபிரேயம்: הרובע המוסלמי) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு புராதன பகுதிகளில் ஒன்று ஆகும். இது பழைய நகரின் வடகிழக்கில் 31 எக்டர் (76 ஏக்கர்) பரப்பை உள்ளடக்கியது.[1] இப்பகுதி பெரியதும், சனத்தொகை கூடியதும், கிழக்கே சிங்க வாயிலிலிருந்தும், தெற்கே கோயில் மலையின் வடக்குச் சுவர் மற்றும் மேற்கே தமஸ்கு வாயில் - மேற்குச் சுவர் வரை பரந்து காணப்படுகின்றது. சிலுவைப் பாதை இப்பகுதியில் ஆரம்பிக்கின்றது.[2] இசுலாமியப் பகுதி சனத்தொகை 22,000 ஆகும்.[2]