ஆலோவீன்
அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.[1][2][3][4] இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஆலோவீன், கடைபிடிப்போர் ...
ஆலோவீன் | |
---|---|
கடைபிடிப்போர் | பல்வேறு மேற்கத்திய நாடுகள் (பார்க்க கட்டுரை) |
வகை | மதச்சார்பற்ற வகை |
கொண்டாட்டங்கள் | இடத்தைப் பொறுத்து மாறும். |
நாள் | அக்டோபர் 31 |
தொடர்புடையன | சம்ஹைன், புனிதர் அனைவர் பெருவிழா |
மூடு
மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.