கேரளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
ஆழப்புழா மாவட்டம் அல்லது ஆலப்புழை மாவட்டம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுள் ஒன்றாகும். இம்மாவட்டம் 1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா மையம் ஆகும். இப்பகுதி தேங்காய் நார்த்தொழிலுக்குப் புகழ் பெற்றது. இம்மாவட்டம் மாநிலத்தின் பல பகுதிகளுடனும் நீர்வழியினால் நன்கு இணைக்கப்பட்டு உள்ளது. இதுவே மாநிலத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த மாவட்டம் ஆகும்.
இம்மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கட்டு வள்ளம் என்றழைக்கப்படும் படகு வீடுகள் மிகவும் புகழ்பெற்றவை.
இந்த மாவட்டத்தை ஆறு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:[1]
ஆலப்புழா என்ற பெயர் ஆல் என்றால் கடல், புழா என்றால் ஆறு; வாய் என்பது பொருளாகும். ஒரு நதியும் கடலும் சேரும் இடம் என்றே, மலையாளம் / தமிழ் மொழியில், இவ்வாறு முழுப் பொருள் ஆகிறது. ஆலப்புழா மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலா இடகளில் ஒன்றாகும். உள்நாட்டு கால்வாய்களின் பெரிய வலையமைப்பைக் கொண்டுள்ளது, இது "கிழக்கின் வெனிஸ்" என்ற பெயரைப் பெறுகிறது. கால்வாய்களின் இந்த பெரிய வலையமைப்புகள் ஆலப்புழாவின் உயிர்நாடி யாகும். மலபார் கடற்கரை வழியாக நன்கு அறியப்பட்ட துறைமுகங்களில் ஒன்றான ஆலப்புழா, இந்த காலத்தில் மிகவும் பரபரப்பான வர்த்தக நடுவங்களில் ஒன்றாகும். இன்றும் தேங்காய் நார் தரைவிரிப்பு தொழிலுக்காகவும்,இறால் வளர்ப்பு இடத்திற்காகவும் இடமாக, தனது அழகைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சுற்றுலாவின் சிறந்த தலைமையகமான ஆலப்புழா, தேவாலயங்கள் நிறைந்தது.
குறிப்பாக கோட்டயம், ஆறன்முளா நகரங்களுக்கும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை வரலாற்று அடிப்படையில், வருடாந்திர அரண்முலா பாம்பு படகு பந்தயத்திற்கு புகழ் பெற்றவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறும் பாம்பு-படகு பந்தயங்கள் நடைபெறுகின்றன. இந்த போட்டியானது, நேரு படகுப் பந்தயம் என நடைபெறுகிறது. இப்போட்டியினை இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு, 1952 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பாம்பு-படகுகள், ஒவ்வொன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுக்காரர்களால் பராமரிக்கப்பட்டு, பந்தயம் நடைபெறும் நாளில், காற்றினைக் கிழித்துக் கொண்டு போவது போல, கடல் நீர் பரப்பை கிழித்துக் கொண்டு செல்வது கொள்ளை அழகாக பலராலும் எண்ணப் படுகிறது. இப்போட்டி பரபரப்பானது பல நாட்டு சுற்றுலாப்பயணிகளையும், இந்தியாவின் பல மாநில மக்களையும், ஒவ்வொரு வருடமும் கவர்ந்து இழுக்கிறது.செங்கன்னூர், ஆலப்புழாவில், சபரிமலைக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும்.[2]
காயம்குளத்தில் உள்ள கிருஷ்ணபுரம் அரண்மனை புகழ் பெற்றது. மாவேலிக்கரா நகரத்தில் இருக்கும் புத்தர் சிலையும், சாரதா மண்டிரம் முக்கிய இடங்களைச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காண்கின்றனர். இங்குள்ள புத்தர் சிலை அமர்ந்திருக்கும் தோரணையில் உள்ளது. இது தாமரை நிலையினை ஒத்திருக்கிறது. இச்சிலைகளுக்கு பொதுவான ஓர் அடிப்படை என்னவென்றால், தலையில் முடி பொறிக்கப்படவில்லை. தொல்பொருள் துறையின் ஆய்வுகள், இம்முடி இன்மையை விளக்க முடியவில்லை. ஆனால் தலையில், தலைக்கவசத்தை ஒத்த அடையாளங்கள் உள்ளன. இது போன்ற சிலை மரபுகள், காந்தாரா மற்றும் மதுரா மரபுகளின் புத்தர் சிலைகளில் காணப்படும் பொதுவான சிறப்பியல்புகள் ஆகும்.இங்குள்ள சிலையானாது, நான்கு அடிகள் (1.2 மீ) உயரம் கொண்டதாகும். இந்த சிலையே, மிகப் பெரியதெனக் கருதப்படுகிறது.
குட்டநாடு என்பது அலப்புழா மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதியானது அதிகப் போக்குவரவு உள்ள நீர்வழிகளால் சூழப்பட்டு உள்ளன. நெல் விளைச்சலுக்கு, இக்குட்டநாட்டு வேளாண் மக்கள் புகழ் வாய்ந்து விளங்கினர். அந்த அளவுக்கு இவ்விளைச்சல் பணியை, அர்ப்பணித்து செய்தனர். அதனால் முன்பு, இப்பகுதியானது "கேரளத்தின் நெல்லாரா" என்று அழைக்கப்பட்டது. அதாவது "கேரளாவின் அரிசி கிண்ணம்" என்பது பொருளாகும். வேளாண்மைக்கான செலவினம், உழவுத் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல காரணிகளால், இந்த விவசாயத்தை கடுமையாக பாதிப்பு அடைந்தன. பல முன்னாள் நெல் வயல்கள் இப்போது மற்ற பயிர்களுக்கு மாறி விட்டன. ஏனெனில், அவ்வகைப் பயிர்களுக்கு மிகக் குறைந்த முதலீடு இருந்தால் போதும். தகழி சிவசங்கரப் பிள்ளை என்ற கேரள இலக்கியப் படைப்பாளியின் பிறப்பிடமாகும்.[3]
108 வைணவத் திருத்தலங்களில் மூன்று வைணவத் திருத்தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளது. அவைகள்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.