ஆர். கே. கடற்கரை
இந்தியாவின் விசாகப் பட்டினத்திலுள்ள கடற்கரை / From Wikipedia, the free encyclopedia
ஆர். கே. கடற்கரை (RK Beach) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையாகும். இராம கிருட்டிணா கடற்கரை என்ற பெயராலும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது.[1] வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் டால்பின் மூக்கு மலைக்கு அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது.[2]
கடற்கரைக்கு அருகில் இராமகிருட்டிணா மறைபணி ஆசிரமம் இருப்பதால் கடற்கரைக்கு இப்பெயர் வந்தது.