![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Polarfuchs_1_2004-11-17.jpg/640px-Polarfuchs_1_2004-11-17.jpg&w=640&q=50)
ஆர்க்டிக் நரி
From Wikipedia, the free encyclopedia
ஆர்க்டிக் நரி (Arctic fox, Vulpes lagopus) என்பது புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு நரியினம். இது வெள்ளை நரி, பனி நரி, துருவ நரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நரி ஆர்க்டிக் துந்த்ரா உயிர்ச்சூழல் முழுவதும் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஆர்க்டிக் நரி, காப்பு நிலை ...
ஆர்க்டிக் நரி[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நாய்ப் பேரினம் |
பேரினம்: | Vulpes |
இனம்: | V. lagopus |
இருசொற் பெயரீடு | |
Vulpes lagopus L. 1758[2] | |
![]() | |
ஆர்க்டிக் நரியின் பரவல் | |
வேறு பெயர்கள் | |
Alopex lagopus |
மூடு
ஆர்க்டிக் நரியானது கடுமையான ஆர்க்டிக் பனிப்பகுதிகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளது. இதன் ரோமம் அடர்த்தியாகவும் கால்களில் மயிர்க்கற்றைகள் அடர்ந்தும் உள்ளது. இதன் குறுகிய மொத்தமான காதுகள் பனியின் கடுமையைக் குறைக்கின்றன. பனிக்காலங்களில் இதன் நிறம் பனியையொத்து வெள்ளையாகவும் வெயிற்காலத்தில் இது பழுப்பாகவும் காணப்படும்.