![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/7c/Years_1-7_Blu_Ray_Cover.jpg/640px-Years_1-7_Blu_Ray_Cover.jpg&w=640&q=50)
ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)
ஆரி பாட்டர் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டக் கற்பனைத் திரைப்படத் தொடர்கள் / From Wikipedia, the free encyclopedia
ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்கள் என்பது ஆரி பாட்டர் என்ற நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத் தொடர்கள் ஆகும். இந்த திரைப்படத்திற்கு வார்னர் புரோஸ். என்ற நிறுவனம் படத்தின் வினியோகஸ்தராக செயல்பட்டது. இது 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மொத்தம் 8 திரைப்படத் தொடர்களாக வெளியானது.
ஆரி பாட்டர் | |
---|---|
![]() | |
இயக்கம் | கிரிஷ் கொலம்பஸ் (1-2) அல்போன்சா குயூரான் (3) மைக் நியூவெல்(4) டேவிட் யேட்சு (5-8) |
தயாரிப்பு | டேவிட் ஹேமேன் கிரிஷ் கொலம்பஸ் (3) மார்க் ராடுகிலிஃப்(3) டேவிட் பேர்ரன் (5-8) ஜே. கே. ரௌலிங் (7-8) |
மூலக்கதை | ஆரி பாட்டர் ஜே. கே. ரவுலிங் |
திரைக்கதை | ஸ்டீவ் குலவ்ஸ் (1–4, 6–8) மைக்கேல் கோல்டன்பர்க் (5) |
இசை | சான் வில்லியம்சு (1-3) பாட்ரிக் டாயில் (4) நிக்கொலசு ஹூப்பர்(5-6) அலெக்சாண்டர் டெசுபிளாத் (7-8) |
நடிப்பு | டேனியல் ராட்க்ளிஃப் ரூபர்ட் கிரின்ட் எம்மா வாட்சன் |
ஒளிப்பதிவு | சான் சீல் (1) ராஜர் பிராட்டு(2, 4) மைக்கேல் செரெசின் (3) ஸ்டவொமிர் இட்சியாக்(5) புரூணோ டெல்பான் (6) எடுவர்டோ செர்ரா (7-8) |
கலையகம் | வார்னர் புரோஸ். ஹேடே பிலிம்சு 1492 பிக்சர்சு (1-3) |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்சு |
வெளியீடு | 2001–2011 |
ஓட்டம் | 1179 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | மொத்தம் (8 படங்கள்) $1.2 பில்லியன் |
மொத்த வருவாய் | மொத்தம் (8 படங்கள்) $7.7 பில்லியன் |
இந்தத் தொடரை முக்கியமாக டேவிட் ஹேமேன் என்பவர் தயாரித்தார், மேலும் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகிய மூன்று பெரும் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இதுவரையிலும் ஆரி பாட்டர் திரைப்படத் தொடரில் கிரிஷ் கொலம்பஸ், அல்போன்சா குயூரான், மைக் நியூவெல் மற்றும் டேவிட் யேட்சு போன்ற நான்கு இயக்குநர்கள் பணிபுரிந்துள்ளார்கள்.
ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 மற்றும் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 போன்ற படங்கள் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த 50 படங்களில் ஒன்றாகும், மேலும் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் மற்றும் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 போன்ற படங்கள் $1 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது. இது உலகளவில் 7.7 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய மூன்றாவது திரைப்படத் தொடராகும்.
- நடிகர்கள்
- டேனியல் ராட்க்ளிஃப் (2001-2011)
- ரூபர்ட் கிரின்ட் (2001-2011)
- எம்மா வாட்சன் (2001-2011)
- இயக்குனர்கள்
- கிரிஷ் கொலம்பஸ் (1-2)
- மைக் நியூவெல் (4)
- டேவிட் யேட்சு (5-8)