![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d7/Ayesha_Omar_at_Uth_Records_Press_Conference.jpg/640px-Ayesha_Omar_at_Uth_Records_Press_Conference.jpg&w=640&q=50)
ஆயிசா ஓமர்
பாக்கித்தான் நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஆயிசா ஓமர் (ஆங்கிலம்: Ayesha Omer) இவர் ஒரு பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு நடிகையும், விளம்பர மாதிரியும், பாடகியும் மற்றும் ஓவியரும் ஆவார். புல்பூலேவில் கூப்சுரத் [2] லேடீஸ் பார்க் என்றத் திரைப்படத்தில் நடாஷா,[3] ஜிந்தகி குல்சார் ஹை படத்தில் சாரா,[4] தன்ஹாயில் அர்சூ மற்றும் தில் அப்னா அவுர் ப்ரீத் பராய்[5] படத்தில் அலீனா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்படுகிறார். அவர் பாக்கித்தானின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[6] அவர் பாக்கித்தான் தொலைக்காட்சியின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் மற்றும் பெரும்பாலும் பாக்கித்தானில் ஒரு "ஸ்டைல் ஐகானாக" கருதப்படுகிறார்.[7][8][9] 2019 ஆம் ஆண்டில், வார்சி சர்வதேச அமைப்பால் தம்கா-இ-ஃபக்ர்-இ-பாகிஸ்தான் (பாகிஸ்தானின் பெருமை) என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.[10][11]
ஆயிசா ஓமர் | |
---|---|
![]() ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆயிசா ஓமர் | |
தாய்மொழியில் பெயர் | عائشہ عمر |
பிறப்பு | 12 அக்டோபர் 1981 (1981-10-12) (அகவை 42) லாகூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்), பாக்கித்தான் |
தேசியம் | பாகிஸ்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய கலைக் கல்லூரி |
பணி | நடிகர், மாதிரி, பாடகர், ஓவியர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்பொழுதுவரை |
துணைவர் | அசவர் ரஹ்மான் (2016–19)[1] |
2012 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் தனிப்பாடலான "சல்தே சல்தே" மற்றும் "காமோஷி" ஆகியவற்றை வெளியிட்டார், இது பாக்கித்தானில் வணிகரீதியான வெற்றியாக இருந்தாலும், விமர்சகர்களிடமிருந்து கலவையான எதிர்வினையை சந்தித்தது. ஓமர் சிறந்த தனிப்பாடலுக்கான லக்ஸ் ஸ்டைல் விருதை வென்றார்.[12] 2015 ஆம் ஆண்டில் வெற்றிகரமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமான கராச்சி சே லாகூர் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து யல்கார் என்ற போர் சம்பந்தமான படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.[13]