ஆயர் ஈத்தாம்
மலேசியா, ஜொகூர், பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
பினாங்கு, ஆயர் ஈத்தாம் நகரம் குறித்து அறிய, காண்க ஆயர் ஈத்தாம், பினாங்கு.
ஆயர் ஈத்தாம் (மலாய்: Ayer Hitam அல்லது Bandar Seramik; ஆங்கிலம்: Ayer Hitam; சீனம்:亚依淡; ஜாவி: يير هيتم) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஒரு நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் ஆயர் ஈத்தாம், நாடு ...
ஆயர் ஈத்தாம் | |
---|---|
Ayer Hitam | |
ஆயர் ஈத்தாம் அருகில் கூட்டரசு சாலை 1 (மலேசியா) - கூட்டரசு சாலை 50 (மலேசியா) வழித்தடங்களுக்கு இடையிலான சந்திப்பு | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°55′6″N 103°10′49″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
நகராண்மை | யோங் பெங் நகராண்மைக் கழகம் (Yong Peng Municipal Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 86100 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-07 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
மூடு
இந்த நகருக்கு வெண் களிமண் நகரம் (Ceramic Town) எனும் பெயரும் உண்டு. மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கூட்டரசு சாலை 1 (மலேசியா) ; கூட்டரசு சாலை 50 (மலேசியா)
வழித் தடங்களின் சந்திப்பில் இந்த நகரம் உள்ளது.
அத்துடன் மலேசிய வடக்கு-தெற்கு விரைவுசாலையின் தென்பகுதி வழித் தடமும் இந்த நகரைக் கடந்துதான் செல்கிறது. இந்த நகரம் மட்பாண்டங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்களுக்குப் பெயர் பெற்றது.[1]