ஆமைத் தீவுகள் தேசியப் பூங்கா (Turtle Islands National Park, மலாய்: Taman Pulau Penyu) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவு, சண்டக்கான் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.

விரைவான உண்மைகள் ஆமைத் தீவுகள் தேசியப் பூங்கா, அமைவிடம் ...
ஆமைத் தீவுகள் தேசியப் பூங்கா
Thumb
Map showing the location of ஆமைத் தீவுகள் தேசியப் பூங்கா
ஆமைத் தீவுகள்
அமைவிடம்சபா, மலேசியா
அருகாமை நகரம்சண்டக்கான்
ஆள்கூறுகள்6°08′58″N 118°3′15″E
பரப்பளவு17 km2 (6.6 sq mi)
நிறுவப்பட்டது1977
நிருவாக அமைப்புசபா பூங்காக்கள்
மூடு

சண்டக்கான் நகருக்கு வடக்கே, சுமார் 3 கி.மீ. (1.9 மைல்) தொலைவில், சுலு கடலில் இருக்கும் ஆமைத் தீவுகளில் இந்தத் தேசியப் பூங்கா அமைந்து உள்ளது. ஆமைத் தீவுகள் தேசியப் பூங்கா, சபா வனப்பூங்காக்கள் அமைப்பினால் (Sabah Parks) நிர்வகிக்கப் படுகிறது.

அமைவிடம்

ஆமைத் தீவுகளில் 3 தீவுகள் உள்ளன: செலிங்கான் தீவு (Selingaan); லிட்டில் பாக்குங்கான் தீவு (Little Bakkungan); குலிசான் தீவு (Gulisaan). இந்தத் தீவுகளின் கடற்கரைகளில் பச்சை ஆமைகள் (Green sea turtle) மற்றும் அழுங்காமைகள் (Hawksbill turtle) முட்டையிடுவது வழக்கம். அதனால் இந்தப் பூங்கா பிரபலமானது.

ஆமைத் தீவுகள் தேசியப் பூங்கா 17.4 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இருப்பினும், ஆமைத் தீவுகளின் தீவுக் கூட்டத்தில் மொத்தம் 10 தீவுகள் உள்ளன. அவற்றில் 3 தீவுகள் மலேசியாவின் ஆமைத் தீவுகள் பூங்காவின் ஒரு பகுதியாகும். மேலும் 7 தீவுகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவி - தாவி மாநிலத்தின் ஆமைத் தீவுகள் வனவிலங்கு சரணாலயத்தைச் (Turtle Islands Wildlife Sanctuary, Tawi-Tawi, Philippines) சேர்ந்த பகுதியாகும்.

மலேசியாவின் முதல் ஆமைக் குஞ்சு பொரிப்பகம்

Thumb
செலிங்கான் தீவில் ஆமைகள்

1966 ஆகஸ்டு 1-ஆம் தேதி மலேசியாவின் முதல் ஆமைக் குஞ்சு பொரிப்பகம் செலிங்கான் தீவில் நிறுவப்பட்டது. அதற்கு சபா மாநில அரசாங்கம் முழுமையாக நிதியுதவி செய்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, மீதம் உள்ள இரண்டு தீவுகளில் ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் நிறுவப்பட்டன.

1972-ஆம் ஆண்டில், செலிங்கான், பாக்குங்கான் கெச்சில் மற்றும் குலிசான் ஆகிய தீவுகளில் பறவைகளுக்கான சரணாலயங்கள் நிறுவப்பட்டன. 1977-ஆம் ஆண்டில், அந்த இடங்கள் கடல் பூங்காக்களாக மேம்படுத்தப்பட்டன.[1]

ஆமைகளுக்கு அடையாள இடுகை

ஆமைகளைக் கண்காணித்துக் கொள்ளுதல்; குஞ்சு பொரிப்பகங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல்; ஆராய்ச்சி நோக்கங்களுக்காக ஆமைகளுக்கு அடையாள இடுகை செய்தல்; போன்றவற்றுக்கு நிரந்தரப் பூங்கா ஊழியர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

ஆமைத் தீவுகள் தேசியப் பூங்கா எல்லைக்குள், மற்றொரு தீவான லிபரான் தீவு (Libaran Island), இருந்தாலும், அந்தத் தீவு பெரிய அளவில் ஆமைக் குஞ்சுகள் பொரிக்கும் இடமாக அமையவில்லை.

செலிங்கான் தீவு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.