ஆப்கானிஸ்தான் பெண்கள் புரட்சிகர சங்கம் (Revolutionary Association of the Women of Afghanistan) என்பது ஆப்கானித்தானின் காபூலில், அமைந்துள்ள ஒரு பெண்கள் அமைப்பாகும். இது பெண்களின் உரிமைகளையும் மற்றும் மக்களாட்சி தத்துவத்தையும் ஊக்குவிக்கிறது. இது பிப்ரவரி 1987இல் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக படுகொலை செய்யப்பட்ட ஆப்கானித்தான் மாணவ ஆர்வலர் மீனா கேஷ்வர் கமால் என்பவரால் 1977இல் நிறுவப்பட்டது. வன்முறையற்ற உத்திகளை ஆதரிக்கும் இந்தக் குழு, [2] ஆப்கானிஸ்தானின் காபூலில் தனது ஆரம்ப அலுவலகத்தைக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் 1980களின் முற்பகுதியில் பாக்கித்தான் சென்றது.

விரைவான உண்மைகள் உருவாக்கம், நிறுவனர் ...
ஆப்கானிஸ்தான் பெண்கள் புரட்சிகர சங்கம்
உருவாக்கம்1977
நிறுவனர்மீனா கேஷ்வர் கமால்
வகைமகளிருக்கான அமைப்பு
நோக்கம்பெண்கள் உரிமைகள், மக்களாட்சி
தலைமையகம்
சேவைப் பகுதி
பாக்கித்தான், ஆப்கானித்தான்[1]
வலைத்தளம்www.rawa.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
மூடு

பெண்களுக்கான மனித உரிமைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஆப்கானித்தானின் பெண்களை அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதையும், ஆப்கானித்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களாட்சி அடிப்படையிலும், மதச்சார்பின்மை அடிப்படையிலும், பெண்கள் முழுமையாகப் பங்கேற்கக்கூடிய அடிப்படைவாதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.[3] இந்த அமைப்பு பலதரப்பு நிராயுதபாணிகளுக்காகவும் பாடுபடுகிறது. 1977 முதல், இந்தக் குழு அனைத்து ஆப்கானிய அரசாங்க அமைப்புகளையும் எதிர்த்தது: ஆப்கானித்தான் மக்களாட்சி குடியரசு, ஆப்கானித்தானின் இஸ்லாமிய அரசு, ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (1996-2001), இஸ்லாமிய குடியரசு (2001-2021), மீண்டும் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (2021 முதல்) போன்றவை.

பின்னணி

மனித உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காவும் போராடும் ஆப்கானித்தான் பெண்கள் புரட்சிகர சங்கமானது ஆப்கானித்தான் பெண்களின் சுதந்திரமான சமூக மற்றும் அரசியல் அமைப்பாக முதன்முதலில் 1977இல் காபூலில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு அதன் வேலைகளின் ஒரு பகுதியை ஆப்கானித்தானில் இருந்து பாக்கித்தானுக்கு நகர்த்தியது. மேலும், ஆப்கானிய பெண்களுக்கு வேலை செய்வதற்காக அவர்களின் முக்கிய தளத்தையும் நிறுவியது.

Thumb
மீனா கேஷ்வர் கமால், ஆப்கானிஸ்தான் பெண்கள் புரட்சிகர சங்கத்தின் நிறுவனர்
Thumb
ஏப்ரல் 28, 1998 அன்று பாக்கித்தானின் பெசாவரில் நடந்த சங்கத்தின் போராட்டம்

1990களில் ஆப்கானித்தான் பெண்கள் புரட்சிகர சங்கத்தின் பெரும்பாலான முயற்சிகள், பாக்கித்தானில் கருத்தரங்குகள் நடத்துவதும், பத்திரிகையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதும், பிற நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் உள்ளடக்கியிருந்தது. இந்த அமைப்பு பாக்கித்தானிலும், ஆப்கானித்தானிலும் பெண்களுக்காவும், சிறுமிகளுக்காகவும் இரகசிய பள்ளிகள், அனாதை இல்லங்கள், செவிலியப் படிப்புகள் , கைவினை மையங்கள் போன்றவற்றை உருவாக்கியது. ஆப்கானித்தானில் முதாவீன் மத காவல்துறையால் பெண்களை தெருவில் அடித்து, தூக்கிலிடப்படுவதை இவர்கள் ரகசியமாக படம்பிடித்தனர். அமைப்பின் நடவடிக்கைகள் தலிபான்களாலும்,, ஐக்கிய இஸ்லாமிய முன்னணியாளும் ("வடக்கு கூட்டணி") தடை செய்யப்பட்டன. ஆனாலும் இவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். மேலும் பயம்-இ-ஜான் போன்ற வெளியீடுகளில் தங்கள் பணியை விளம்பரப்படுத்தினார்கள்.[4]

2001 படையெடுப்புக்குப் பிறகு

அமைப்பானது 2001இல் தொடங்கிய நேட்டோ தலையீட்டை கடுமையாக விமர்சித்தது. ஏனெனில் மக்கள் தொகையில் உயிர்ச்சேதம் அதிகமாக இருந்தது. இந்த அமைப்பு 2001 படையெடுப்பின் போது ஆப்கானித்தானின் பல்வேறு நகரங்களில் கைவிடப்பட்ட பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட நான்கு புகைப்படங்களை தங்கள் வலைத்தளத்திலிருந்து அங்கீகரிக்காமல் பயன்படுத்தியதாக அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் வரை சென்றது. [5]

சமீபத்திய செயல்பாடுகள்

சங்கம், மருத்துவமனைகள், பள்ளிகள் , அனாதை இல்லங்களுக்கு ஆதரவாக நிதி சேகரிக்கிறது. மேலும், பாக்கித்தானிலும், ஆப்கானித்தானிலும் பல திட்டங்களை நடத்துகிறது. இவர்கள் 2006 முதல் அனைத்துலக பெண்கள் நாளான்று நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். 

அங்கீகாரம்

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பணிக்காக அமைப்பானது இதுவரை உலகம் முழுவதும் இருந்து 16 விருதுகளையும், சான்றிதழ்களை வென்றுள்ளது. அவற்றில் ஆறாவது ஆசிய மனித உரிமை விருதும் (2001) அடங்கும்.[6]

இதையும் கான்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.