From Wikipedia, the free encyclopedia
அவுரங்கபாத் – மும்பை ஜன் சதாப்தி, ஒரு பகல் நேர ரயில் ஆகும். இது புறப்பட்ட அதே நாளில் ஆரம்பித்த ரயில் நிலையத்திற்கே வந்து சேர்ந்துவிடும். வரலாற்றுச் சிறப்புமிக்க அவுரங்கபாத்தினை மும்பை நகரத்துடன் இணைக்கிறது. அவுரங்கபாத்திலிருந்து மும்பைக்கு சிறந்த வசதியுடன் அதிவிரைவில் செல்லுவதற்கான சிறந்த தேர்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
‘ஜன்’ எனும் சொல் ஜனதா எனும் இந்தி வார்த்தையிலிருந்து வந்தது. இந்த சொல் ஜனம் என்ற சமசுகிருதச் சொல்லை மூலமாகக் கொண்டது. இதன் பொருள் ‘மக்கள்’ என்பதாகும், மேலும் ‘சதாப்தி’ என்பதற்கு ‘சாதாரண மக்கள்’ என்று பொருள். சதாப்தி ரயில்களின் ஒரு பிரிவாக இந்தப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் இரு முக்கிய நகரங்களான அவுரங்கபாத் மற்றும் மும்பையினை விரைவு ரயிலாக இது இணைக்கிறது.[1]
ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், மும்பையின் தாதர் ரயில் நிலையத்திலிருந்து அவுரங்கபாத் வரை 12071/72 என்ற வண்டி எண்ணுடன் இயங்குகிறது. மத்திய ரயில்வேயினால் தினசரி அதிவிரைவு ரயில் சேவையாக இது இயக்கப்படுகிறது. ஜூலை 1, 2013 முதல் மாற்றப்பட்ட கால அட்டவணைப்படி தாதர் வரை இயக்கப்படுகிறது மற்றும் அதன் ரயில்பாதைக்கான ரேக்கினை மட்கோவான் ஜன் சதாப்தி ரயிலுடன் பகிர்ந்துகொள்கிறது.
ரயில்வே நேரப்படி 00600 மணிக்கு அவுரங்கபாத்திலிருந்து 12072 என்ற வண்டி எண்ணுடன் புறப்படும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் 12300 மணி அளவில் மும்பை தாதர் ரயில் நிலையத்தினை அடைகிறது. 374 கிலோ மீட்டர் தூரத்தினை (232 மைல்கள்) 6.5 மணி நேரத்தில் கடந்து செல்கிறது. இந்த வழிப்பாதையில் மன்மாட், நாசிக், கல்யாண், தானே மற்றும் தாதர் ஆகிய இடங்களில் நிறுத்தங்களைக் கொண்டுள்ளது. செயல்பாட்டு நிறுத்தங்களாக கசாரா மற்றும் இகத்பூரி ஆகிய இடங்களிலும் நிறுத்தங்களைக் கொண்டுள்ளது.[2]
தாதர்-இலிருந்து திரும்பும் போது வண்டி எண் 12071 ஆக 1400 மணிநேர அளவில் புறப்பட்டு அவுரங்கபாத்தினை 2035 மணிநேரத்தில் வந்தடைகிறது.[3]
அவுரங்கபாத் ஜன் சதாப்தி ரயில் ஒன்பது கோச்சுகள், ஆறு ஜன் சதாப்தி சேர் கார்ஸ், ஒரு ஏசி சேர் கார் மற்றும் இரு சுமைகளுக்கான கோச்சுகளையும் கொண்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவுரங்கபாத் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின் மத்திய ரயில்வே தாதர் ஜன் சதாப்தி ரயிலுடன் மூன்று கோச்சுகளைச் சேர்த்தது. இதனால் மொத்த கோச்சுகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இருப்பினும் ரயிலினை பெரும்பாலும் உபயோகிப்பவர்கள் பயணச்சீட்டு கிடைக்காமல் தீபாவளி போன்ற விழாக்கால நேரங்களில் பேருந்துகளையே நாடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் ஒன்பது கோச்சுகளுடன் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த எக்ஸ்பிரஸ் 12 கோச்சுகளாக உயர்த்தப்பட்டது.
கோடைக்கால விடுமுறை போன்ற நேரங்களில் நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மூன்று கோச்சுகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இது பற்றி மராத்வாடா ரயில்வே விகாஸ் சமிதி தலைவர் திரு.ஓம் பிரகாஷ் வர்மா கூறுகையில் “2008 முதல் ரயில்வே பொறுப்பாளர்களால் பயணிகளின் நீண்ட காலத்தேவையான கூடுதலான கோச்சுகளை சேர்க்கும் திட்டத்தினை, பூர்த்தி செய்ய இயலவில்லை. இதனால் தினமும் 250 க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் காத்திருக்கும் வரிசையில் இருக்க வேண்டியுள்ளது”. “இதற்கு முன்பு அவுரங்கபாத்திலிருந்து மும்பை சிஎஸ்டி வரை இயக்கப்பட்ட இந்த ரயில் இந்த வருடத்தின் மார்ச் முதல் தாதர் வரை இயக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு கோச்சுகளை அதிகரித்த பின்னரும் கூட அதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகள் சரிவர செய்யப்படவில்லை என வாடிக்கையாளர்கள் சிலரால் குற்றம் கூறப்பட்டது.[4]
எண் | நிலையத்தின் பெயர் (குறியீடு) | வரும் நேரம் | புறப்படும் நேரம் | நிற்கும் நேரம் (நிமிடங்கள்) | கடந்த தொலைவு (கி.மீ) | நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | அவுரங்கபாத் (AWB) | தொடக்கம் | 06:00 | 0 | 0 km | 1 | 1 |
2 | மன்மாட் சந்திப்பு (MMR) | 07:50 | 07:55 | 5 min | 114 km | 1 | 1 |
3 | நாசிக் சாலை (NK) | 08:50 | 08:55 | 5 min | 187 km | 1 | 1 |
4 | கல்யாண் சந்திப்பு (KYN) | 11:25 | 11:30 | 5 min | 321 km | 1 | 1 |
5 | தானே(TNA) | 11:48 | 11:50 | 2 min | 341 km | 1 | 1 |
6 | தாதர் (DR) | 12:30 | முடிவு | 0 | 365 km | 1 | 1 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.