அவசர நிறுத்தி
From Wikipedia, the free encyclopedia
அவசர நிறுத்தி (ஆங்:Emergency-stop), நிறுத்தல் நிலைமாற்றி (Kill Switch) அல்லது அவசர மின்திறன் இணைப்பின்மை (EPO, Emergeny Power Off) என்றும் அறியப்படும், இது ஒர் பாதுகாப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி சாதனம் அல்லது இயந்திரங்களை நெருக்கடி காலங்களில் நிறுத்துகிறது. வழக்கமான காலங்களில் இயந்திரங்களை நிறுத்தும் முறைகளைப் போலன்றி, இயந்திரத்தின் அனைத்து அமைப்புகளையும் ஒரு ஒழுங்கான முறையில் எவ்வித சேதாரமும் இன்றி நிறுத்துகிறது, புதிதாக இயக்குபவர்கள் மற்றும் பார்வையாளர்களாலும் இயந்திரத்தின் இயக்கத்தினை விரைவில் நிறுத்தும் வண்ணம் (அது இயந்திரத்தினை சேதாரமாக்கினாலும்) அவசரநிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியற்ற இயக்குபவர்கள் மற்றும் பார்வையாளர்களாலும் எளிதில் அணுகும் வண்ணம் அவசரநிறுத்தி வெளிப்படையாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.