![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/Al-Qadisiyyah_in_Iraq.svg/langta-640px-Al-Qadisiyyah_in_Iraq.svg.png&w=640&q=50)
அல் - காதிசிய மாகாணம்
ஈராக்கின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அல்-காதிசிய கவர்னரேட் அல்லது அல்-காதிசிய மாகாணம் (Al-Qādisiyyah Governorate, அரபு மொழி: القادسية ) என்பது ஈராக்கின் மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மைய-தெற்கில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் ஆவர். இதன் தலைநகரம் அல் திவானியா . 1976 க்கு முன்னர், இது அல்-முத்தன்னா மற்றும் நஜாஃப் ஆகியவற்றுடன் அட்-திவானியா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி 636 இல் இஸ்லாமிய ராசிதீன் படைகள் சாசானியப் பேரரசின் படைகளை தோற்கடித்த அல்-காதிசியா போரின் தளமான வரலாற்று நகரமான அல்-கதிசியாவின் பெயரைக் கொண்டு இந்த மாகாணத்திற்கு பெயரிடப்பட்டது. மாகாணத்தில் பெரும்பான்மை மக்களாக சியா அரபு மக்கள் உள்ளனர். இந்த மாகாணத்தில் ஹோர் ஆல்டெல்ம்ஜின் மெசொப்பொத்தேமியன் சதுப்பு நிலமும் அடங்கியுள்ளது.
அல் - காதிசிய மாகாணம்
القادسية | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 31°51′N 45°3′E | |
நாடு | ![]() |
தலைநகரம் | அல் திவானியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,153 km2 (3,148 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 13,20,000 (10% of total) |
ம.மே.சு. (2017) | 0.661[1] medium |