அல்சீரியா
வட ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
அல்சீரியா (அரபு மொழி: الجزائر al-Jazā'ir; வார்ப்புரு:Lang-berட்சயர், ; பிரெஞ்சு மொழி: Algérie), உத்தியோகபூர்வமாக அல்சீரியா மக்கள் சனநாயக குடியரசு, வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இறையாண்மை உடைய, ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் அல்சீயர்சு ஆகும், இது நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. 2,381,741 சதுர கிலோமீட்டர் (919,595 சதுர மைல்) பரப்பளவில், அல்சீரியா உலகிலேயே பத்தாவது பெரிய நாடாகவும், ஆபிரிக்காவில் மிகப்பெரியதாகவும் உள்ளது.[1] இதல் வடகிழக்கு எல்லையில் துனீசியாவும், கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைசரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. வடக்கில் மத்தியதரைக் கடலும், தென்மேற்கில் மேற்கு சகாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் கொண்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பின் படி அல்சீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] நாட்டின் 48 மாகாணங்கள் மற்றும் 1,541 கம்யூன்கள் (மாவட்டங்கள்) கொண்ட ஒரு அரை சனாதிபதி குடியரசு ஆகும். 1999 முதல் அப்தலசீசு போதேலிபிகா சனாதிபதியாக உள்ளார்.
அல்ஜீரிய மக்கள் சனநாயக குடியரசு | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: من الشعب و للشعب (அரபு) "மக்களிலிருந்தும் மக்களுக்காகவும்" | |
நாட்டுப்பண்: அல்சீரியா நாட்டுப்பண் (அரபு:) வாக்குறுதி | |
தலைநகரம் | அல்ஜியர்ஸ் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | அரபு1 |
மக்கள் | அல்ஜீரியன் |
அரசாங்கம் | அரை அதிபர் குடியரசு |
• அதிபர் | அப்துலசீஸ் பூத்தெஃப்லிக்கா |
• பிரதமர் | அப்துலசீஸ் பெல்காதெம் |
அமைப்பு | |
• அமாடீட் அரசவம்சம் | 1014 இலிருந்து |
• ஒட்டோமான் பேரரசு | 1516 இலிருந்து |
1830 இலிருந்து | |
• பிரான்சிடமிருந்து விடுதலை | ஜூலை 5, 1962 |
பரப்பு | |
• மொத்தம் | 2,381,740 km2 (919,590 sq mi) (11வது) |
• நீர் (%) | negligible |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 33,333,216 (35வது) |
• 1998 கணக்கெடுப்பு | 29,100,867 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $253.4 பில்லியன் (38வது) |
• தலைவிகிதம் | $7,700 (88வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $102.026 பில்லியன் (48th) |
• தலைவிகிதம் | $3,086 (84வது) |
ஜினி (1995) | 35.3 மத்திமம் |
மமேசு (2004) | 0.728 Error: Invalid HDI value · 102வது |
நாணயம் | அல்ஜீரிய டினார் (DZD) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
not observed | |
அழைப்புக்குறி | 213 |
இணையக் குறி | .dz |
|
பண்டைய அல்சீரியாவானது பண்டைய நியூமியன்சு, போனீசியா, கார்தீனியர்கள், ரோமர், வாண்டால்சு, பைசாந்தியப் பேரரசு, உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், இத்ரிசுசிட், அக்லபீத், இரசுடாமைட், பாத்திம கலீபகம், இரிட், அமாடிட்சு, அல்மோரவிட்சு, அல்மோகட்சு, சுபானிநார்ட்சு, ஒட்டமன்சு மற்றும் பிரஞ்சு காலனித்துவ பேரரசு உட்பட பல பல பேரரசுகளைக் கண்டுள்ளது. அல்சீரியாவின் பழங்குடி மக்களே பெர்பர்கள்.
அல்சீரியா பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாக விளங்குகிறது. வட ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயுவை வழங்குகின்றன, இந்த நாட்டின் ஆற்றல் ஏற்றுமதிகளே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. OPEC படி, உலகின் எண்ணெய் இருப்பில் அல்சீரியா 16 வது இடத்தையும், ஆபிரிக்காவில் இரண்டாவது இடத்தையும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயு இருப்பில் 9 ஆவது இடத்தையும் வகிக்கிறது. சோனாத்ராச், தேசிய எண்ணெய் நிறுவனம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அல்சீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படைபலத்தைக் கொண்ட நாடுகளில் ஒருவராகவும், கண்டத்தில் இராணுவத்துக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நாடாகவும் உள்ளது; அல்சீரியாவுக்கான பெரும்பாலான ஆயுதங்கள் உருசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அவருடன் நெருக்கமான கூட்டாளிகளாகவும் உள்ளனது.[3][4] அல்சீரியா ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், ஓப்பெக், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் உறுப்பினராகவும், மக்ரேப் யூனியனின் நிறுவனர் உறுப்பினராகவும் உள்ளது.