சிரியாவின் வடமேற்கில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
அலெப்போ (Aleppo, அரபு மொழி: حلب / ஹலப்), சிரியாவின் வடமேற்குப் பகுதியில் திமிஷ்கிலிருந்து 310 கிலோமீட்டர்கள் (193 மைல்கள்) தொலைவிலுள்ள ஓர் பெரிய நகரமாகும்.[3] சிரியாவின் மிகுந்த மக்கள்தொகை உள்ள ஆளுநகரகமான (மாநிலம்) அலெப்போ ஆளுநகரத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2,132,100 (2004 கணக்கெடுப்பு) மக்கள்தொகை உள்ள இந்தநகரம் பெரிய சிரியா அல்லது சாம் என அழைக்கப்படும் இப்பகுதியிலேயே மிகப் பெரிய நகரமாகவும் உள்ளது.[4][5]பண்டைய அலெப்போ நகரம் பல நூற்றாண்டுகளாகவே பெரிய சிரியாவின் மிகப்பெரும் நகரமாகவும் உதுமானியப் பேரரசில் இசுதான்புல், கெய்ரோ அடுத்து மூன்றாவது பெரிய நகரமாகவும் இருந்து வந்துள்ளது.[6][7][8]
அலெப்போ
حلب Ḥalab | |
---|---|
அடைபெயர்(கள்): ஆஷ்-ஷாபா | |
நாடு | சிரியா |
ஆளுநரகம் | அலெப்போ ஆளுநரகம் |
மாவட்டம் | மவுண்ட் சீமோன் (ஜபால் செமான்) |
அரசு | |
• ஆளுநர் | மொகமது வாகிது அக்காடு |
• நகரமன்ற தலைவர் | மொகமது அய்மன் அல்லாக் |
பரப்பளவு | |
• நகரம் | 190 km2 (70 sq mi) |
ஏற்றம் | 379 m (1,243 ft) |
மக்கள்தொகை (2004 கணக்கெடுப்பு) | |
• நகரம் | 21,32,100 |
• அடர்த்தி | 11,221/km2 (29,060/sq mi) |
• பெருநகர் | 21,81,061 |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
இடக் குறியீடு(கள்) | நாட்டுக் குறியீடு: 963 நகரக் குறியீடு: 21தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | www.alp-city.org |
மூலங்கள்: அலெப்போ நகரப் பகுதி[1] மூலங்கள்: நகர மக்கள்தொகை [2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.