அறிவியல் அறிவு வழி

விஞ்ஞான உலகில் நாம் From Wikipedia, the free encyclopedia

அறிவியல் அறிவு வழி (scientific method) என்பது இவ்வுலகின் இயல்பை, இயக்க முறையை ஒரு சீரான அணுகுமுறையினூடாகக் கண்டறிந்து, நிரூபித்து, பகிர முனைகின்றது.[1] அறிவியல் நோக்கிலான அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் விழிப்புணர்ச்சிக் காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்கு அடித்தளம் இட்டது. அதற்கு முன்பு சீனா, இந்தியா, போன்ற நாடுகளில் ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அறிவியல் அறிவு வழி என்ற தனித்துவமான வழிமுறை உருவாகியது.[சான்று தேவை]

அறிவியல் அறிவு வழி என்ற சொற் தொடர் அறிவியல் வழிமுறையையே பொதுவாகச் சுட்டி நிற்கின்றது. அறிவியல் வழிமுறையின் ஊடாக பெறப்படுவதே அறிவு. அவ்வறிவை சீரிய அமைப்பு அடிப்படையிலான பயன்பாட்டின் மூலம் பயன்படுத்தும் போது உருவாவதுதான் தொழினுட்பம். தொடக்கத்திலேயே, அறிவியல் அறிவு மூலம் தொழினுட்பம் வளர்ச்சியடைந்தது. எனினும், 1900 ஆம் ஆண்டுகளுக்குப் பின்புதான் அவ்வறிவை திட்டமிட்ட முறையில் பொறியியலுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மேலோட்டம்

அறிவியல் அறிவு வழி என்பது அறிவியல் செயற்படும் விதமாகும்.[2] ஏனெனில் அறிவியல் முன்னைய அறிவிலிருந்து எழுப்பப்படுவதுடன், அது உலகத்திற்கான எமது நம்பகத்தன்மையை வளர்க்கின்றது.[3] அறிவியல் அறிவு வழியானது தானும் அவ்வாறே வளர்ச்சியடைகின்றது.[4][5] அதாவது இது புதிய அறிவை வளர்ப்பதில் மிகவும் முனைப்புடையதாக உருவாகின்றது.[6][7] உதாரணத்திற்கு, பொய்மைப்படுத்தல் கொள்கை (1934 ஆம் ஆண்டு முதன்முதலில் முன்மொழியப்பட்டது) உறுதிப்படுத்தல் சார்பை கருதுகோள்களை நிறுவுவதற்குப் பதிலாக பொய் என்று நிரூபிப்பதன் மூலம் ஒழுங்குபடுத்தலைக் குறைக்கின்றது.[8]

அறிவியல் அறிவு வழிப் பிரிவுகள்

அறிவியல் அறிவு வழியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன

  1. அறிவியல் வழிமுறை
  2. அறிவியல் அறிவு
  3. அறிவியல் அறிவின் பயன்பாடு

அறிவியல் வழியின் அடிப்படை தத்துவம்

அறிவியல் அறிவு மார்க்கத்துக்கு அடிப்படை உலகாயுத தத்துவம். இந்த தத்துவத்தின் பல கூறுகளை சோ. ந. கந்தசாமி "இந்திய தத்துவக் களஞ்சியம்" என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். "பிரபஞ்சமாகிய இயற்கை பிறருடைய தயவின்றித் தானே என்றும் உள்ளது, தானே இயங்குகின்றது." ”நம்மால் அவ்வியல்புகளை அறிய முடியும்” என்ற அடிப்படை நம்பிக்கையிலேயே அறிவியல் அறிவு வழி செயற்படுகின்றது. கணி, அள, "அளக்கப்பட கூடியதே அறிய பட கூடியது" என்கிற கூற்று சற்று மிகைப்பட்ட கூற்று என்றாலும், அளத்தல் அறிவியல் வழியின் முக்கிய அம்சம் ஆகும். மேலும், உலகில் உண்மை இருக்கின்றது. அதை நாம் சார்பற்ற நிலையில் நோக்கலாம் என்பதும் இந்த வழிமுறையின் ஒரு முக்கிய நிலை ஆகும்.

உணரும் தன்மை

நமது புலன்களின் வழியே இவ்வுலகின் நிகழ்வுகள், பொருட்களின் தன்மைகளை உணர்கின்றோம்.

பரிந்துரை நடைமுறை கோட்பாடு

துல்லியமான அவ்வுணர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வுலகின் இயல்பை, இயக்கத்தை நோக்கி நாம் ஒரு புரிதல் அடைந்து, அப்புரிதலின் அடிப்படையில் நாம் ஒரு நடைமுறைக் கோட்பாட்டை பரிந்துரைக்கின்றோம் அல்லது ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.

அறிவியல் அறிவு வழியின் கூறுகள்

அறிவியல் அறிவு வழியின்[9] பிரதான நான்கு கூறுகளாக[10][11][12] மறுசெய்கைகள்,[13][14] மறுநிகழ்வுகள்,[15] அகவெளிப்பாடு அல்லது ஒழுங்குபடுத்தல் என்பன காணப்படுகின்றன.

ஆய்வுகள்

பரிந்துரைக்கப்படும் எக்கோட்பாடும் எதோ ஒரு வழியில் ஆய்வுக்கு உட்பட்டு நிருப்பிக்கப்பட வேண்டும். அப்படி நிரூப்பிக்கப்பட இயலாத கோட்பாடுகள் அறிவியல் அறிவுமூல கோட்பாடுகள் என கருதப்பட முடியாது. எவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்துவது? பரிந்துரைக்கப்படும் கோட்பாடு எதாவது சவாலான நிகழ்வை அல்லது இயல்பை ஊகிக்க அல்லது வருவதுரைக்க வேண்டும். ஆய்வு மூலம் அந்நிகழ்வு நிருபிக்கப்படும், அல்லது மறுக்கப்படும். இன்னுமொரு வழியில் சொல்லுவதானால், பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாட்டின் "உண்மையான ஆய்வு அந்த கோட்பாட்டை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது தவறு என்று காட்டும் முயற்சியே." எனவே தகுந்த ஆய்வினை வடிவமைத்தல் அறிவியல் அறிவு வழியின் முக்கிய நிலை.

எந்த ஒரு நடைமுறை கோட்பாடும் அதன் வரையறைகளை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும். குறிப்பாக ஆய்கருவிக் குறிப்புகள், ஆய்வுக் குறைபாடுகள், சூழ்நிலைகளைப் பற்றி தெளிவான விளக்கங்கள் தரப்படுதல் வேண்டும். எந்த ஒரு ஆய்வும் அதன் விளைவுகளும் மீண்டும் பிறர் செய்யக் கூடியதாக இருந்தாலே அது ஏற்றுக்கொள்ளப்படும்.

முடிவுகள்

ஆய்வு முடிவுகள் சவாலான நிகழ்வுகளை அல்லது இயல்பை சரியாக வருவதுரைத்தால் அக்கோட்பாடுகள் முன்பே உள்ள பரந்த நடைமுறை கோட்பாடுகளுடன் இணைக்கப்படும். மாறாக, ஆய்வு முடிவுகள் வருவதுரைக்கத் தவறினால், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக் கோட்பாடோ அல்லது ஆய்வோ மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

பகிர்வு

முக்கியமான பரிந்துரைக்கப்படும் நடைமுறைக் கோட்பாடுகள், ஆய்வு முடிவுகளைப் பிறருடன் பகிர்வது, அறிவியல் அறிவு வழியின் முக்கிய ஒரு படி நிலை. பகிர்வதன் மூலமே பிற ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்தப்பட்டு, பரந்த நிருபீக்கப்பட்ட நடைமுறை கோட்பாடுகள் விரிவடைந்து அல்லது செதுக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் தொடர்ந்து செல்ல உதவுகின்றது.

இறுதியாக, ஒரு நடைமுறை கோட்பாட்டின் திறன் அதன் வருவதுரைக்கும் ஆழத்தில் உள்ளது. இன்றைய அறிவியல் நடைமுறைக் கோட்பாடுகள் உலகின் பல இயல்புகளை விளக்கி நிற்கின்றது. அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே நமது தொழில்நுட்ப சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் பல துறைகளில் ஆய்வுகள் தொடக்கத்திலேதான் இருக்கின்றன. அறிவியல் அறிவு வழியில் (உணரும் தன்மை, நடைமுறைக் கோட்பாடு பரிந்துரைப்பு,ஆய்வு முடிவுகளை அலசுதல், பகிர்வு) பரிணாம வளர்ச்சிப் பாதையில் மனிதனைக் கொண்டு செல்கின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.