அமேசான் கிண்டில் என்பது அமேசான் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் ஒரு மின்படிப்பான் ஆகும். இதனை பயன்படுத்துவோர் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்னூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் போன்ற அனைத்து எண்முறை ஊடகங்களையும் இணைய உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும், எளிதாக மின்னூல்களை வாசிக்கவும் இந்தக் கருவி பயன்படுகின்றது[1].
மேலதிகத் தகவல்கள் உருவாக்குனர், உற்பத்தியாளர் ...
அமேசான் கிண்டில் |
---|
மூன்றாம் தலைமுறை கிண்டில் | உருவாக்குனர் | அமேசான்.காம் |
---|
உற்பத்தியாளர் | பாக்ஸ்கான் |
---|
வகை | மின்னூல் படிப்பான் |
---|
வெளியீட்டு தேதி | நவம்பர் 19, 2007 (2007-11-19) |
---|
விலை | $399 |
---|
இயக்க அமைப்பு | லினக்ஸ்2.6.26 |
---|
ஆற்றல் | 3.7 வோல்ட்டு, 1750 BA1001 model |
---|
மைய செயற்பகுதி | 532 ஏர்ட்சு, ARM-11 |
---|
சேமிப்பு திறன் | (total/user available) 256 மெகாபைட்டு/180 மெகாபைட்டு 2 கிகாபைட்டு/1.4 கிகாபைட்டு(கிண்டில்2) or 4 GB/3 கிகாபைட்டு(கிண்டில்3) or 4 GB/3.3 கிகாபைட்டு(கிண்டில்DX) உள்ளக நினைவகம்திடீர் நினைவகம் |
---|
நினைவகம் | 256 மெகாபைட்டு (கிண்டில்3) |
---|
Display | 6 அங்குலம் மூலைவிட்டம், 3.6 in (91 மிமி) × 4.8 in (122 மிமீ), 600 × 800 படவணுs or 0.48 படவணுs, 167 ppi density, 4-level அடர்கருப்பு or 16-level கிரே(கிண்டில்2 and 3) மின் தாள் |
---|
உள்ளீடு | அகிலத் தொடர் பாட்டை 2.0 , நினைவக அட்டை, 3.5 மில்லிமீட்டர் காதொலிப்பான் இயல்புநிலை ஒலிப்பான், AC திறன் பொருத்தி |
---|
Connectivity | அமேசான் கிண்டில்சிடிஎம்ஏ வைப் பயன்படுத்துகிறது , 802.11bg ஒய்-ஃபை (கிண்டில்3) |
---|
Dimensions | 8.0 × 5.3 × 0.8 in (203 × 135 × 20.3 மிமீ) 8.0 × 5.3 × 0.36 in (203 × 135 × 9.14 மிமீ) (கிண்டில்2) 7.5 × 4.8 × 0.34 in (190 × 123 × 8.51 மிமீ) (கிண்டில்3) 10.4 x 7.2 x 0.38 in (264 x 183 x 9.65 மிமீ) (கிண்டில்டிஎக்ஸ் 2) |
---|
Weight | 10.2 oz (290 g) (கிண்டில்1 & 2) 8.7 oz (247 g) (கிண்டில்3) 8.5 oz (241 g) (கிண்டில்3 Wi-Fi only) 18.9 oz (540 g) (கிண்டில்டிஎக்ஸ் 2) |
---|
|
மூடு
கிண்டில் வன்பொருள் கருவிகள் மின்தாள்களில் அகரவரிசை, வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. இதனால் தாள்களில் வாசிப்பது போன்ற தோற்ற உருவாக்கம் பெறப்படுகின்றது. அத்துடன் இவை குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவுகின்றது.
அமேசானின் 2011 மே மாத அறிக்கையில், கடந்த ஆண்டில் அச்சிடப்பட்ட நூல்களை விடவும் அதிகளவில் கிண்டில் நூல்கள் தம்மால் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது[2][3]. மின் மை (E Ink) என்ற வகையிலான திரையை இந்தக் கிண்டில் கருவி கொண்டிருப்பதால், தாளில் படிக்கும் கண்களை உறுத்தாத அனுபவம் கிடைக்கிறது.