கண்டம் From Wikipedia, the free encyclopedia
அமெரிக்காக்கள் (Americas) அல்லது அமெரிக்கா[1][2] எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர்[3]. உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
பரப்பளவு | 42,549,000 கிமீ2 |
---|---|
மக்கள்தொகை | 910,720,588 (ஜூலை 2008) |
மக்கள் | அமெரிக்கர், பான்-அமெரிக்கர் |
நாடுகள் | 35 |
சார்பு மண்டலங்கள் | 23 அமெரிக்க நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளின் பட்டியல் |
மொழிகள் | ஸ்பானியம், ஆங்கிலம், போர்த்துக்கீசு, பிரெஞ்சு, மற்றும் பல |
நேர வலயங்கள் | UTC-10 முதல் UTC வரை |
கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது[4]. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கின. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கின. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது[5].
30 degrees, 1800x1800 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.