From Wikipedia, the free encyclopedia
அமெரிக்கக் கால்பந்தாட்டம் (American Football) உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு அமெரிக்காவில் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. அமெரிக்காவில் என். எஃப். எல். உலகில் மிகப்பெரிய அமெரிக்கக் காற்பந்துச் சங்கங்கள் ஆகும். இது தவிர ஜப்பான், மெக்சிகோ, மற்றும் ஐரோப்பாவில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.
அமெரிக்கக் காற்பந்தாட்டமும் ரக்பியும் ஐக்கிய இராச்சியத்தில் 19ம் நூற்றாண்டில் இருந்த விளையாட்டுகளிலிருந்து பிறந்தது. இந்த விளையாட்டுகளின் சட்டங்களை வால்ட்டர் கேம்ப் மாற்றி அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை படைத்தார். வால்ட்டர் கேம்ப் இன்று "அமெரிக்கக் காற்பந்தாட்டத்தின் தந்தையார்" என்று அழைக்கப்பட்டவர். அமெரிக்கக் கல்லூரிகளில் விளையாடி இந்த விளையாட்டு புகழுக்கு வந்தது. இன்று வரை கல்லூரி காற்பந்தாட்டம் அமெரிக்காவில் மிக விரும்பப்பட்ட விளையாடுகளில் ஒன்றாகும். 1922ல் என். எஃப். எல். சங்கத்தை ஆரமித்து இன்று இந்த சங்கம் அமெரிக்காவில் நாலு மிகப்பெரிய தொழிலாக விளையாட்டுச் சங்கங்களில் (Four major professional sports leagues) ஒன்று ஆகும்.
ஒரு அமெரிக்கக் காற்பந்து மைதானம் 360 அடி நீளம், 120 அடி அகலம் அளவு ஆகும். மைதானத்தின் ஓரங்களில் 30 அடி நீளத்தில் இரண்டு ஓர மண்டலங்கள் (End zones) அமைந்தன. ஓர மண்டலத்துக்கு பின் 18.5 அடி அளவில் பிரிந்து கோல் கம்பிகள் (Goal posts) அமைந்தன.
11 ஆட்டக்காரர்கள் ஒரு அணியில் விளையாடவேண்டும். பொதுவாக ஒரு போட்டியில் நாலு 15-நிமிடம் பகுதிகள் இருக்கும். பந்தை தூக்கிண்டு ஓர மண்டலத்தில் போனால் 6 புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "டச்டவுன்" (Touchdown). ஒரு டச்டவுன் பெற்றி கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் ஒரு கொசறு புள்ளி (Extra point) பெறமுடியும். டச்டவுன் செய்யாமல் கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் மூன்று புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "ஃபீல்ட் கோல்" (Field goal).
ஒரு அணியின் பக்கம் பந்து இருக்கும்பொழுது ஒரு உடைமை (possession) என்று அறியப்படுவது. 10 யார்டுகள் முன் போகரத்துக்கு 4 சமயங்கள் இருக்கும்; இந்த சமயங்களை "டவுன்" (down) என்று அழைக்கப்பத்தது. 4 டவுன்களில் 10 யார்டுகள் பெறமுடியவில்லைனால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைத்து அந்த அணி உடைமை ஆரமிக்கும். பொதுவாக 3 டவுனில் 10 யார்ட் பெறமுடியவில்லைனால் 4ம் டவுனில் "பன்ட்" (Punt), அல்லது பந்து உதைப்பு செய்யுவார்; இப்படி செய்தால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைக்கிறதுக்கு பதில் எங்கே பந்து சேரரதோ அங்கே எதிர் அணி பந்து பெற்று உடைமையை ஆரமிக்கும். பந்தை முன்போகரத்துக்கு இரண்டு வழி இருக்கு: துக்கி எறிதல் (Passing) மற்றும் தூக்கிண்டு ஓடுதல் (Running or Rushing).
நாலு பகுதிகள் முடிந்து நிறைய புள்ளிகளை பெற்ற அணி போட்டியை வெற்றிபெறும்.
ஃபீல்ட் கோல் உதைக்கும் ஆட்டக்காரரை உதையாளர் (Kicker) என்று அழைக்கப்படும். பன்ட் உதைக்கும் ஆட்டக்காரர் பன்ட்டர் (Punter) என்று அழைக்கப்படும். இது தவிர, புள்ளி பெறத்துக்கு பிரகு உதையாளர் எதிர் அணிக்கு பந்தை உதைக்கனும்; இந்த ஆட்டம் நடைக்கும்பொழுது உதைக்கும் அணியில் (Kicking team) அட்டக்காரர்கள் பந்து பிடிக்கும் அணியின் (Receiving team) வீரர்களை மோதபார்ப்பார். இந்த ஆகிய ஆட்டக்காரர்கள் "சிறப்பு அணி" என்றழைக்கப்படுவார்.
உலகில் மிகப்பெரிய, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கம் தேசிய காற்பந்தாட்டக் குழுமம் அல்லது என். எஃப். எல். ஆகும். இந்த குழுமத்தில் 30 அணிகள் விளையாடுகிறார்கள். அமெரிக்காவில் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம், அல்லது என். சி. ஏ. ஏ., கல்லூரி காற்பந்தாட்டத்தை ஒழுங்குப்படுகிறது; அமெரிக்காவில் கல்லூரி காற்பந்து தான் பல விளையாட்டுகளில் மிக விரும்பப்பட்டது ஆகும். அமெரிக்கா தவிர ஜப்பானில் எக்ஸ்-லீக் குழுமத்தில் 60 அணிகள் விளையாடுகிறார்கள். ஜெர்மனியில் ஜெர்மன் காற்பந்தாட்டக் குழுமத்தில் 12 அணிகள் விளையாடுகிறது.
கனடாவில் அமெரிக்கக் காற்பந்தாட்டப்போன்ற கனடியக் காற்பந்தாட்டம் என்று ஒரு விளையாட்டு நடைபெறுகிறது; இந்த விளையாட்டு கனடிய காற்பந்தாட்டக் குழுமத்தில் ஒழுங்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.