![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/AmundsenSea.jpg/640px-AmundsenSea.jpg&w=640&q=50)
அமுண்ட்சென் கடல்
தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
அமுண்ட்சென் கடல் (Amundsen Sea) என்பது மேற்கு அந்தாட்டிக்காவில் உள்ள மேரி பைர்ட் லேண்டிலிருந்து தென்முனைப் பெருங்கடலின் ஒரு துணைக் கடல் பகுதி ஆகும். இதன் கிழக்கே பறக்கும் மீன் முனை ( தர்ஸ்டன் தீவின் வடமேற்கு முனை) மற்றும் மேற்கில் சிப்பிள் தீவில் உள்ள டார்ட் முனை ஆகியவற்றின் இடையே அமைந்துள்ளது. இதன் எல்லையானது பறக்கும் மீன் முனை அமுண்ட்சென் கடல் மற்றும் பெல்லிங்ஷவுசன் கடலுக்கு இடையிலான எல்லையை கொண்டுள்ளது. டார்ட்டு முனைக்கு மேற்கே அமுண்ட்சென் மற்றும் ரோஸ் கடல்களுக்கு இடையில் தென்முனைப் பெருங்கடலின் பெயரிடப்பட்ட கடல் இல்லை. கேப்டன் நில்ஸ் லார்சனின் தலைமையில் 1928-1929 ஆம் ஆண்டு நோர்வே நாட்டினரின் பயணத்தின்போது, 1929 பிப்ரவரியில் இந்த பகுதியை ஆராய்ந்தபோது நோர்வே துருவ ஆய்வாளர் ரோல்ட் அமுண்ட்சனின் நினைவாக இப்பகுதியிக்கு பெயரிட்டது. [1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/AmundsenSea.jpg/640px-AmundsenSea.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/06/Antarctic_Sea_Ice_-_Amundsen_Sea.jpg/640px-Antarctic_Sea_Ice_-_Amundsen_Sea.jpg)
இந்தக் கடல் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டுள்ளது. மேலும் திவைட்ஸ் பனி நாக்கு அதில் நீண்டுள்ளது . அமுண்ட்சென் கடலுக்குள் பாயும் பனிவிரிப்பு சராசரியாக 3 km (1.9 mi) தடிமன் கொண்டது; ஏறக்குறைய டெக்சாஸ் மாநிலத்தின் அளவு, இந்த பகுதி அமுண்ட்சென் கடல் உறைவிடம் (ASE) என்று அழைக்கப்படுகிறது; இது மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியின் மூன்று பெரிய பனி வடிகால் படுகைகளில் ஒன்றாகும்.