சல்பேட்டு கனிமம் From Wikipedia, the free encyclopedia
அப்லோவைட்டு (Aplowite) என்பது CoSO4•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமம் ஆகும். இது இயற்கையாகத் தோன்றும் ஒரு நான்முகி கோபால்ட்(II) சல்பேட்டு ஆகும். எழுநீரேற்றான பைபெரைட்டு கனிமம், அறுநீரேற்றான மூரவுசைட்டு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் இதுவொரு கீழ்நிலை நீரேற்றாகவும், ஒற்றை நீரேற்றான கோபால்ட்கீசெரைட்டுடன் ஒப்பிடுகையில் இதுவோர் உயர் நீரேற்றாகவும் அறியப்படுகிறது. பொதுவாக மூரவுசைட்டுடன் சேர்ந்தே படிகங்களாக இது கிடைக்கிறது[2][3].
கோபால்ட்டைட்டு படிகத்தின் மீது அப்லோவைட்டு | |
பொதுவானாவை | |
---|---|
வகை | ரோசினைட்டு |
வேதி வாய்பாடு | (Co,Mn,Ni)SO4 • 4H2O |
இனங்காணல் | |
நிறம் | அடர் இளம் சிவப்பு, ஒளியில் மெல்லிய இளம் சிவப்பு |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
அடர்த்தி | 2.33 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது) 2.36 கிசெ.மீ3 (கணக்கிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (–). α = 1.528 β = n.d. γ = 1.536 |
2V கோணம் | என்.டி. |
கரைதிறன் | நீரில் கரையும் |
மேற்கோள்கள் | [1] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.