தோக்கியோவின் அனேடா விமான நிலையம் From Wikipedia, the free encyclopedia
தோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம், Tokyo International Airport (東京国際空港 Tōkyō Kokusai Kūkō?), பொதுவாக அனேடா வானூர்தி நிலையம் (羽田空港 Haneda Kūkō?) அல்லது தோக்கியோ அனேடா வானூர்தி நிலையம் (東京羽田空港 Tōkyō Haneda Kūkō?) (ஐஏடிஏ: HND, ஐசிஏஓ: RJTT), சப்பானின் தோக்கியோ பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு முதன்மை வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது தோக்கியோவின் ஓட்டா பகுதியில் தோக்கியோ தொடர்வண்டி நிலையத்திலிருந்து தெற்கே 14 km (8.7 mi) தொலைவில் அமைந்துள்ளது.
தோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம் 東京国際空港 Tōkyō Kokusai Kūkō | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | Public | ||||||||||||||||||||||
இயக்குனர் | தோக்கியோ ஏவியேசன் பீரோ, நிலம், கட்டமைப்பு,போக்குவரத்து மற்றும் சுற்றலாத் துறை அமைச்சு, (வான் போக்குவரத்து); சப்பான் வானூர்தி முனைய நிறுவனம் (முனையங்கள்) | ||||||||||||||||||||||
அமைவிடம் | ஓட்டா, தோக்கியோ, சப்பான் | ||||||||||||||||||||||
மையம் | சப்பான் ஏர்லைன்ஸ் ஆல் நிப்பான் ஏர்வேஸ் இசுக்கைமார்க்கு ஏர்லைன்ஸ் ஏர் டோ இசுக்கைநெட் ஆசியா ஏர்வேஸ் | ||||||||||||||||||||||
உயரம் AMSL | 21 ft / 6 m | ||||||||||||||||||||||
இணையத்தளம் | www.tokyo-airport-bldg.co.jp | ||||||||||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2012) | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
மூலம்: சப்பானிய வான்போக்குவரத்து தகவல் வெளியீடு[1] வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் புள்ளிவிவரம் |
![]() |
இந்தக் கட்டுரை ஜப்பானிய உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ கன்சி மற்றும் கனாக்கு பதிலாக தெரியலாம். |
தோக்கியோவின் அனைத்து உள்ளூர் பறப்புகளும் அனேடா நிலையத்தில் இருந்தும் பெரும்பான்மையான பன்னாட்டு பறப்புக்களை நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் அனேடாவில் நான்காவது ஓடுபாதை அமைக்கப்பட்ட போது, ஓர் தனிப்பட்ட பன்னாட்டு முனையமும் திறக்கப்பட்டது. இதன்பின்னர் அனேடாவிலிருந்து இயங்கும் பன்னாட்டுச் சேவைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக இங்கிருந்து சியோல், சாங்காய், ஹொங்கொங் மற்றும் தாய்பெய்யிற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையிலான வான்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சப்பானிய அரசு அனேடா வானூர்தி நிலையத்தின் பன்னாட்டு பங்கை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர்.[2]
2012ஆம் ஆண்டில் 66,795,178 பயணியர் பயன்படுத்தி உள்ளனர். பயணிகள் போக்குவரத்தில் இது ஆசியாவில் இரண்டாவதாகவும் அட்லான்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையங்களை அடுத்து உலகில் நான்காவதாகவும் உள்ளது. அனேடாவும் நரிட்டாவும் இணைந்த தோக்கியோவின் நகரமைப்பு வானூர்தி நிலையப் போக்குவரத்து இலண்டன், நியூயார்க் நகரங்களை அடுத்து உலகின் மூன்றாவது நிலையில் உள்ளது.
சப்பானின் இரண்டு பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களான சப்பான் ஏர்லைன்ஸ் (முனையம் 1) மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் (முனையம் 2), ஆகியவற்றின் அடித்தளமாக அனேடா நிலையம் உள்ளது.
திசம்பர் 2009இல் போர்பசுடிராவெல்லர்.கொம் அனேடா வானூர்தி நிலையத்தை உலகிலேயே மிகவும் நேர ஒழுங்குள்ள வானூர்தி நிலையமாக மதிப்பிட்டுள்ளது. புறப்படும் சேவைகள் 94.3% சரியான நேரத்திலும் வந்துசேரும் சேவைகள் 88.6% சரியான நேரத்திலும் இயங்கின.[3]
Seamless Wikipedia browsing. On steroids.