![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Surajkund_dam_%2522downstream%2522_side.jpg/640px-Surajkund_dam_%2522downstream%2522_side.jpg&w=640&q=50)
அனங்பூர் அணைக்கட்டு
அராயானாவில் உள்ள அணைக்கட்டு / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அனக்பூர் கிராமத்திற்கு ( அரங்பூர் என்றும் அழைக்கப்படுகிறது) அருகில் அமைந்துள்ள அனங்பூர் அணை (Anangpur Dam) மிகவும் பிரபலமான சூரஜ்குண்டிலிருந்து 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவு தூரத்தில் அமைந்துள்ளது. இந்த தனித்துவமான இந்திய நீரியல் பொறியியல் அமைப்பு 8 ஆம் நூற்றாண்டில் தோமரா வம்சத்தின் மன்னர் அனங்பாலின் காலத்தில் கட்டப்பட்டது. இந்த இடத்தை தில்லியில் இருந்து டெல்லி - மதுரா சாலை வழியாக அணுகலாம். அனங்பூரில் காணப்படும் காப்பரண்களின் இடிபாடுகள் இது 8 ஆம் நூற்றாண்டில் தில்லியின் முதல் நகரமாக உருவாகியிருந்த லால் கோட்டின் பகுதியாக இது இருந்திருக்கக்கூடும் என்ற அனுமாதத்தை நிறுவுகிறது. [1] இது வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு தாழ்வாரத்திற்குள் ஒரு முக்கியமான பல்லுயிர் பகுதியாகும். இது சரிஸ்கா தேசியப் பூங்காவிலிருந்து டெல்லி வரை நீண்டுள்ளது. சரணாலயத்தைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் பட்கால் ஏரி (வடகிழக்கு 6 கி.மீ), 10 ஆம் நூற்றாண்டின் பண்டைய சூரஜ்குண்ட் நீர்த்தேக்கம், டம்டாமா ஏரி, துக்ளகாபாத் கோட்டை மற்றும் ஆதிலாபாத் இடிபாடுகள் (இவை இரண்டும் டெல்லியில் உள்ளவை), சதர்பூர் கோயில் (டெல்லி) ஆகியவை ஆகும்.[2] இது பருவகாலங்களில் மட்டும் தோன்றும் பரிதாபாத்தின் பாலி-தெளஜ்-கோட் கிராமங்களில் நீர்வீழ்ச்சிகளுக்கு [3] அருகில் உள்ளது. புனித மங்கர் பானி மற்றும் அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயம் ஆகியவையும் அருகில் உள்ளனது. இப்பகுதியில் கைவிடப்பட்ட திறந்த சுரங்கக் குழிகளில் பல்வேறு ஏரிகள் உள்ளன.
அனங்பூர் அணைக்கட்டு | |
---|---|
![]() அனங்பூர் அணைக்கட்டு | |
அமைவிடம் | தில்லி மற்றும் அரியானா |
புவியியல் ஆள்கூற்று | 28°27′45″N 77°15′52″E |
கட்டத் தொடங்கியது | 8ஆம் நூற்றாண்டு |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | உள்ளூர் நீரோடை |
உயரம் | 7மீ (23 அடி) |
நீளம் | 50 மீ (164 அடி) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | நீர் வழங்கல் & நீர்ப்பாசனம் |