![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Azo-group-2D-flat.png/640px-Azo-group-2D-flat.png&w=640&q=50)
அசோ சேர்மம்
From Wikipedia, the free encyclopedia
அசோ சேர்மங்கள் (Azo Compounds) என்பவை R−N=N−R′ என்ற வினைபடு தொகுதியைக் கொண்ட வேதிச் சேர்மங்கள் ஆகும். இந்த வினை செயல்படு தொகுதியில் காணப்படும் R மற்றும் R′ ஆகியவை அரைல் தொகுதியாகவோ அல்லது அல்கைல் தொகுதியாகவோ இருக்கலாம்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Azo-group-2D-flat.png/640px-Azo-group-2D-flat.png)
ஐயூபிஏசியானது அசோ சேர்மங்களைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
- "அசோ சேர்மங்கள், டையசீனின் (டையிமைடு) (HN=NH) வழிப்பொருட்களாகும். அதாவது டையசீனில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களும் ஐதரோகார்பைல் தொகுதிகளால் பதிலியிடப்பட்டதால் கிடைக்கும் சேர்மங்கள் ஆகும்.”
உதாரணமாக, PhN=NPh அசோபென்சீன் அல்லது டைபினைல்டையசீனைக் குறிப்பிடலாம்.[1] மிகவும் நிலையான வழிப்பொருட்கள் இரண்டு அரைல் தொகுதிகளைக் கொண்டுள்ளன. N=N தொகுதியானது அசோ தொகுதி என அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தின் ἀ- (a-, "not") + ζωή (zōē, வாழ்வு) பெறப்பட்ட நைட்ரசனின் பிரெஞ்சுப் பெயரான "அசோட்" (azote) என்பதிலிருந்து அசோ என்ற பெயரானது உருவாகியுள்ளது.
மிகவும் வண்ணமயமான துணி மற்றும் தோல் பொருட்கள் அசோ சாயங்கள் மற்றும் நிறமிகளால் நிறமேற்றப்பட்டவையாகும்.