அசிட்டோன் பெராக்சைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Chembox REFactor
Cyclic dimer and trimer examples | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
3,3-டைமெதில்-1,2-டையாக்சாசைக்ளோபுரோப்பேன் (ஒருபடி) 3,3,6,6-டெட்ராமெத்தில்-1,2,4,5-டெட்ராக்சேன்(இருபடி) 3,3,6,6,9,9-எக்சாமெத்தில்- 3,3,6,6,9,9,12,12-ஆக்டாமெத்தில்- | |||
வேறு பெயர்கள்
டிரை அசிட்டோன் டிரை பெராக்சைடு Peroxyacetone Mother of Satan | |||
இனங்காட்டிகள் | |||
17088-37-8 N | |||
ChemSpider | 3582942 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image
இருபடிச் சேர்மம் | ||
பப்கெம் | 4380970 | ||
| |||
பண்புகள் | |||
C6H12O4 (dimer) C9H18O6 (trimer) C12H24O8 (tetramer) | |||
வாய்ப்பாட்டு எடை | 148.157 கி/மோல் (dimer) 222.24 கி/மோல் (முப்படிச் சேர்மம்) | ||
தோற்றம் | வெண்ணிறப் படிகத் திண்மம் | ||
உருகுநிலை | 131.5 முதல் 133 °செல்சியசு (இருபடிச்சேர்மம்)[1] 91 °செல்சியசு (முப்படிச்சேர்மம்) | ||
கொதிநிலை | 97 முதல் 160 °C (207 முதல் 320 °F; 370 முதல் 433 K) | ||
கரையாது | |||
தீங்குகள் | |||
GHS pictograms | வார்ப்புரு:GHS01 | ||
Explosive data | |||
Shock sensitivity | High/High when wet | ||
Friction sensitivity | High/moderate when wet | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அசிட்டோன் பெராக்சைடு (Acetone peroxide or APEX ) ஒரு கரிம பெராக்சைடு மற்றும் முதனிலை உயர் வெடிபொருள் ஆகும். நேரியல் ஒற்றைப்படி மற்றும் வளைய இருபடிச்சேர்மம், முப்படிச் சேர்மம் மற்றும் நான்குபடிச் சேர்மம் வடிவங்களின் கலவையை வழங்க அசிட்டோன் மற்றும் ஐதரசன் பேரொட்சைடின் வினையால் இது தயாரிக்கப்படுகிறது. முப்படிச் சேர்மமானது மூவசிட்டோன் முப்பெராக்சைடு (டிஏடிபி ) அல்லது மூ-வளைய அசிட்டோன் பெராக்சைடு (டிசிஏபி) என அழைக்கப்படுகிறது. இருபடிச் சேர்மமானது டைஅசிட்டோன் மூபெராக்ஸைடு (டிஏடிபி) என்று அழைக்கப்படுகிறது. அசிட்டோன் பெராக்சைடு ஒரு வெண்ணிறப் படிகத் தூளின் வடிவத்தை ஒரு தனித்துவமான வெளுப்பாக்கியின் வாசனையையோ (தூய்மையற்றதாக இருக்கும்போது) அல்லது தூய்மையாக இருக்கும்போது ஒரு பழம் போன்ற வாசனையையோ கொண்டுள்ளது. மேலும் இது வெப்பம், உராய்வு, நிலை மின்சாரம், அடர் கந்தக அமிலம், வலுவான புற ஊதா கதிர்வீச்சு அல்லது அதிர்ச்சி இவற்றின் காரணமாக வெடிக்கக்கூடும். 2015 ஆம் ஆண்டு வரை நைட்ரஜன் அல்லாத வெடிபொருட்களைக் கண்டறிய வெடிபொருள் கண்டுபிடிப்பாளர்களால் இயலவில்லை. ஏனெனில், பெரும்பாலான வெடிபொருட்கள் நைட்ரசன் அடிப்படையிலானவை. 2001 ஆம் ஆண்டு முதல் நைட்ரசன் இல்லாத டிஏடிபி பல பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்ந்தெடுத்த வெடிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.