From Wikipedia, the free encyclopedia
அசாம் வலாறு என்பது கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய பகுதி மக்களின் சங்கமமாகும் அதாவது; திபெத்திய-பர்மிய (சீன-திபெத்திய), இந்தோ-ஆரிய, ஆஸ்த்ரோசியோடிக் ஆகிய பண்பாடுகளின் சங்கமமாகும். 1821 வரை இப்பகுதி மீது பர்மா பல நூற்றாண்டுகளாக படையெடுத்துள்ளது என்றாலும் பர்மாவின் காலனியாகவோ அதன் சிற்றரசாகவோ அசாம் இருந்தல்லை, 1826 இல் பிரித்தானியர் அசாமைக் கைப்பற்றினர்.
அசாமின் வரலாறு பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. இடைக்கால அசாமில் இருந்த அகோம் பேரரசு காலத்தில் தொடர் கால வரலாறு எழுதப்பட்டுள்ளது. இவை அகோம் மொழியிலும், அசாமி மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. அசாமின் பழங்கால வரலாறானது காமரூப சாசணங்களான செப்பேடுகள், கல்வெட்டுகள், களிமண் எழுத்துகள் வழியாக அறியப்படுகிறது; இந்த சாசணங்கள் வழியாக காமரூப பேரரசு அரசர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்டப் பகுதிகளில் மானியங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளனர். மகாபாரதம் போன்ற காவியங்கள், காளிகா புராணம், யோகினி தந்திரம் போன்ற இடைக்கால நூல்கள் போன்றவற்றைக் கொண்டும் அசாம் பிராந்திய நாட்டுப்புறவியலைக் கொண்டும் அசாம் வரலாறு சீரமைப்பு செய்யப்பட்டுகிறது.
அசாம் வரலாற்றை நான்கு காலங்களாக பிரிக்கலாம். பண்டைய காலமானது சமுத்திர குப்தரின் அலகாபாத் தூணில் காமருபப் பேரரசை குறிப்பிட்டதில் இருந்து, அதாவது நான்காம் நூற்றாண்டில் காமரூப பேரரசு துவங்கியில் இருந்து துவங்குகிறது. இடைக்கால வரலாறானது வங்காள சுல்தான்களால் அசாம் தாக்கப்பட்டதில் இருந்து துவங்குகிறது, இந்த நிகழ்வு முதலில் 1207 இல் பக்த்தியாருதின் ஐபக் கில்ஜியால் நடத்தப்பட்டதாக கன்னி போரோக்சிபோவா கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது, பண்டைய பேரரசுகளின் சரிவுக்குப் பிறகு அதன் இடத்தில் நடுத்தர அரசுகளும் குறுநில அரசுகளும் வேகமாக நிரப்பி. 1826 இல் ஏற்பட்ட யாண்டாபோ உடன்படிக்கையால் பிரித்தானிய காலனி ஆதிக்கம் இங்கு உருவாக வழிவகுக்கப்பட்டது, காலனித்துவ காலத்திற்கு பிறகு 1947-ல் சுதந்திர இந்தியாவின் ஆட்சிக்காலம் துவங்கியது.
அசாமின் மூல வரலாறானது மகாபாரதம், காளிகா புராணம், யோங்கினி தந்திரம் போன்ற புராணங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. துவக்கக்கால ஆரியரல்லாத அரசர்களாக தானவா மரபின் மன்னராக மஹிரங்கா என்பவர் அறியப்படுகிறார். இந்த வம்சமானது நரகாசுரன் மூலம் அகற்றப்பட்டது. நரக வம்சத்தைச் சேர்ந்த பல அரசர்களின் ஒரு பொதுவான பெயராக தோன்றுகிறது. புராணத்தின் படி, நரக மன்னன் கிருஷ்ண்ணால் கொல்லப்பட்டு அதற்குப் பின் அவரது மகன் பாகதத்தன் அரியணை ஏறினான். பாகதத்தனின் படைகள் மகாபாரதப் போரில் கலந்து கொண்டன. இவனது அரசுக்கு உட்பட்ட பகுதிகளாக, வங்காளதேசம் உட்டபட்ட பிராக்ஜோதிச நாடு இருந்தது. நரக வம்சத்தின் கடைசி மன்னன் சுப்பராயா ஆவான்.
அசாமின் பழங்கால வரலாறானது வர்ம மரபின் புஷ்ய வர்மன் 4 ஆம் நூற்றாண்டில் காமரூப பேரரசைத் துவக்குவதில் இருந்து துவங்குகிறது. பேரரசு அதன் பாரம்பரிய பரப்பளவாக, மேற்கில் கரடோயா முதல் கிழக்கில் சதியா வரை பரவியது.[1] இந்த மரபினரும் தொடர்ந்துவந்த இரண்டு அரசு மரபுகளும் தாங்கள் நரகாசூரனின் வழித்தோன்றல்களாக கூறிக்கொண்டனர்.[2] பேரரசு 7 ஆம் நூற்றாண்டில் பாஸ்கரவர்மனின் ஆட்சிக் காலத்தில் அதன் உச்சநிலையை அடைந்தது. சுவான்சாங் இவரது அரசவைக்கு வந்து சென்றார். பாஸ்கர வர்மன் ஒரு பிரச்சனையினால் இறந்தார் இதன் காரனமாக பேரரசு சாலாஸ்தம்பாவின் கைகளுக்கு வந்தது. இவர் மிலேச்ச அரசமரபை உருவாக்கினார். இந்த அரசமரபு 9 ஆம் நூற்றாண்டில் வீழ்ந்த பிறகு, பிரம்ம பாலனின் கீழ் ஆட்சி வந்தது, பிரம்ம பாலனால் பால மரபு துவக்கப்பட்டது. பால மரபின் இறுதி மன்னன் 1110 இல் கௌட பிரதேசத்தின் மன்னனான ராம்பாலனால் நீக்கப்பட்டார். அதன்பிறகு அடுத்தடுத்த இரண்டு அரசர்களான திம்கய தேவன் மற்றும் வைத்திய தேவன் ஆகியோரை கௌட மன்னர்ரகள் நியமித்தனர் எனினும், இந்த ஆட்சியாளர்கள் பெரும்பாலும் சுயேச்சைகளாக ஆட்சி புரிந்து, பழைய காமரூப முத்திரைகளைக் கொண்டு மானியங்களை அளித்தனர். அடுத்தடுத்த மன்னர்களின் வீழ்ச்சியடைய, காமரூப ராஜ்யத்தில் 12 ஆம் நூற்றாண்டில் சுயோட்சையான பேரரசுகளின் எழுச்சியாலும் பண்டைய காமரூப அரசு முடிவுக்கு வந்தது.
மேலும் காண்க: கமாத் நாடு, அகோம் பேரரசு, சுதியா நாடு, காலச்சூரி நாடு, புவயான் தலைவர்கள்.
13 ஆம் நூற்றாண்டின் மத்தியில், சந்தியா, என்னும் காமரூபாங்கரா மன்னன் தன் தலைநகரை காமாடபூருக்கு மாற்றி, காமடா சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.[3] காமடா அரசு வங்க துருக்கியர்களின் தாக்குதலுக்கு ஆளாகியது. இறுதி காமடா மன்னர்களான கென்களை 1498 இல் அலாவுதீன் உசேன் ஷா அகற்றினார்.[4] ஆனால் உசேன் ஷா மற்றும் அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் காமடா நாட்டில் தங்கள் ஆட்சியை பலப்படுத்த இயலவில்லை, இதற்கு முதன்மைக் காரணம் புவ்யான் தலைவர்களின் கிளர்சியாகும்.[5] விரைவில் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கோச் பழங்குடி இனத்தவரான விஸ்வ சிங்கா என்பவரால் கோச் மரபும் கமாட்டா அரசும் உருவாக்கப்பட்டது. கோச் மரபில் அவரது மகன்கள், நர நாராயண் மற்றும் சில்லாரி ஆகியோரின் கீழ் உச்சத்தை அடைந்தது.
முன்னாள் காமரூப பேரரசின் கிழக்கு பகுதியான, கச்சரி ( பிரம்மபுத்ரா ஆற்றின் தெற்கு கரை, நடு அசாம்) மற்றும் சுதியா ( பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரை, கிழக்கு அசாம்) பகுதிகளில் சில புயான் தலைவர்களின் அரசாட்சி தோன்றியது, இவர்களின் கட்டுப்பாட்டில் சுதியா பிராந்தியத்தின் சற்று மேற்கே உள்ள பகுதிகள் வந்தன. சுதியா நாட்டின் நிறுவனர் பிர்பால் தனது முதல் தலைநகரான சுவர்ணகிரியை (தற்போதைய சுபான்ஸ்ரீ ஆற்றின் அருகே) 1187 ஆம் ஆண்டு உருவாக்கினார். பின் அவருடைய மகன் ரத்னட்ஜ்வபால் தலைநகரை ரத்னபூருக்கு (தற்போதைய மஜுலி ) மாற்றினார். இறுதியாக பண்டைய மரபான பால் அரச மரபு 1225 இலும் பின் இறுதியாக 1248 இலும் முடிவுக்கு வந்தது. காலச்சூரி மற்றும் சுதியா அரசுகளுக்கு இடையில், ஷான் குழுவைச் சேர்ந்த, சுகப்பா என்பவரது தலைமையில் அகோம் பேரரசு நிறுவப்பட்டது. அதன்பிறகு 600 ஆண்டுகள் இப்பேரசு நீடித்தது.
அகோம் ராஜ்யம் அதன் உச்சநிலையை அடைந்தது பிறகு, 18 ஆம் நூற்றாண்டில், நாட்டிற்குள் பிரச்சினைகளும், கிளர்ச்சிகளும் துவங்கி குழப்ப நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி மீண்டும் அகோம் மரபினர் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டனர்,[6] 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் அசாம்மீது படையெடுத்தனர்.[7] முதலாம் ஆங்கிலேய-பர்மிய போரின் முடிவில், பர்மியர்கள் தோல்வியுற்றனர் அதனால் பரிமியர் ஆங்கிலேயர் இடையே யண்டோபோ உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியரின் கட்டுப்பாட்டின் அசாம் வந்தது. இதுவே அசாம் வரலாற்றில் இடைக்காலத்தின் இறுதியாக குறிக்கப்படுகிறது.
1824 இல், முதல் ஆங்கிலோ பர்மியப் போர் வெடித்தது. பிரித்தானியர் அசாமிலிருந்து பர்மிய காவற்படையைத் தாக்கினர், 1825 இல் பர்மியர்கள் அசாமில் இருந்து வெளியேறினர்.[8][9][10][11] யாண்டோபோ உடன்படிக்கையின்படி, பர்மியர்கள் அசாம் மீதான அனைத்து உரிமைக் கோரல்களையும் துறந்தனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியர் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குக்குப் பகுதியின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்களாக மாறினர். மேலும் அவர்கள் அசாமில் தங்களது ஆட்சியைப் பலமாக்கிக்கொள்ளத் துவங்கினர். 1830 ஆம் ஆண்டில், கச்சாரி மன்னர் கோவிந்த சந்திரா படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்ட, பிரித்தானியர் 1832 இல் கச்சாரி ராஜ்யத்தை தங்கள் அரசுடன் இணைத்துக் கொண்டனர்.
1833 இல், அகோம் இளவரசர் புரந்தர் சிங்கா மேல் அசாமில் கிளை ஆட்சியாளராக செய்யப்பட்டார். ஆனால் அவரின் தவறான நிர்வாகம், வழக்கமான வருவாயை செலுத்தத் தவறியதைக் காரணமாக காட்டி, பிரித்தானிய அதிகாரிகள் 1838 அந்தப் பிரதேசத்தையும் தனது பேரரசுடன் இணைத்துக்கொண்டனர். இதேபோல 1835 இல், ஜெயின்டியா ராஜ்யமும் பிரித்தானியர்களால் இணைத்துக்கொள்ளப்பட்டது. 1842 ஆம் ஆண்டில், மேலும் மடாக் மற்றும் சதியா ஆகிய பகுதிகளும் பிரித்தானியப் பேரரசினால் இணைக்கப்பட்டன, துலாராம் சேனாதிபதியின் நிர்வாகத்தில் இருந்த, வட கச்சரி மலை மாவட்டத்தை, 1854 ஆம் ஆண்டு பிரித்தானியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறு படிப்படியாக அசாமை முழுவதுமாக தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் பிரித்தானியர்கள் கொண்டுவந்தனர்.[12]
அசாமில் நடந்த சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டில், அசாம் மனக்கிளர்ச்சி (அல்லது அசாம் இயக்கம்) என்ற மக்கள் இயக்கம் வெடித்தது. இந்த இயக்கமானது ஏஏஎஸ்யு மற்றும் ஏஏஜிஎஸ்பி ஆகிய அமைப்புகளின் தலைமையில் இயங்கியது. இவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றவும் புதிய குடியேற்றங்களை தடுக்கவும் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் கிளர்ச்சித் திட்டங்களைக் கொண்டிருந்தனர். கிளர்ச்சி திட்டங்கள் பெரும்பாலும் வன்முறையற்றதாகவே இருந்தன, ஆனால், சில இடங்களில் கடுமையான வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன, நகோன் மாவட்டத்தில் வங்கமொழி பேசும் முசுலீம்கள் 3000 ( அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கை 10000 பேர் கொல்லப்பட்டனர்) [[13]] பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கிளர்ச்சிகள் இந்திய அரசுக்கும் கிளர்ச்சித் தலைவர்களுக்கும் இடையில் 1985 இல் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப்பின் முடிவுக்கு வந்தன. இந்தப் போராட்டங்களில் முதன்மையாக ஈடுபட்டத் தலைவர்கள் அசாம் கன பரிசத் என்ற அரசியல் கட்சியைத் துவக்கி 1985 சட்டமன்றத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தனர்.
2012 இல் உள்ளூர் பழங்குடி மக்களுக்கும், வங்காளத்தில் இருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது இதில் 85 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் 400,000 மக்கள் இடம்பெயர்ந்தனர்.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.