கவுகாத்தி - இது, அசாமின் தலைநகர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரிய நகரம் ஆகும். இது முழு பிராந்தியத்திற்கும் முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது. கவுகாத்தியின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக காமாக்யா கோயில், பிரம்மபுத்திரா நதியில் உள்ள ரிவர் க்ரூஸ், சங்கர்தேவ் கலாக்ஷேத்ரா, உமானந்தா கோயில், அஸ்ஸாம் மாநில உயிரியல் பூங்கா, ஷில்பகிராம் போன்றவை உள்ளன. மேலும், சந்துபி ஏரி,சோனாபூர், மதன் காம்தேவ், சந்திராபூர் மற்றும் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஆகியவை நகரத்திற்கு வெளியே உள்ள மற்ற பிரபலமான இடங்கள் ஆகும். மதன் காம்தேவ் செல்லும் போது, சுற்றுலாப் பயணிகள் தேதுவார் கிராமத்தில் அமைந்துள்ள பழங்கால கோவிலான கோபேஸ்வர் கோயிலுக்கும் வருகை தருகின்றனர்.
மாஜூலி - இது பிரம்மபுத்திரா ஆற்றின் அருகில் அமைந்த நன்நீர்த் தீவு என்று அழைக்கப்படுகிறது.[2] மஜூலி அதன் வைஷ்ணவ சத்திரங்களான கமலாபரி சத்ரா, டகின்பட் சத்ரா, கரமுர்ஹ் சத்ரா, அவுனியாட்டி சத்ரா, பெங்கேனாட்டி சத்ரா மற்றும் சமகுரி சத்ரா போன்றவற்றிற்கு பெயர் பெற்றது.