மைக்ரோசாப்ட் விண்டோசு
ஓர் இயங்கு தள தொடர் / From Wikipedia, the free encyclopedia
விண்டோஸ் (Windows) அல்லது விண்டோசு என்பது மைக்ரோசாஃப்ட் (Microsoft) எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கணினி வரைகலைச் சூழல் இயங்குதளமாகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் 1985 நவம்பரில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.[1] மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.[2] இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது விண்டோஸ் 8 ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (செர்வர்) பதிப்பானது விண்டோஸ் செர்வர் 2012 ஆகும்.
விரைவான உண்மைகள் நிறுவனம்/ விருத்தியாளர், இயங்குதளக் குடும்பம் ...
மைக்ரோசாப்ட் விண்டோஸ் | |
நிறுவனம்/ விருத்தியாளர் |
மைக்ரோசாப்ட் கார்பரேஷன் |
---|---|
இயங்குதளக் குடும்பம் | மைக்ரோசாப்ட் டாஸ் / 9x-அடித்தளங்கள், விண்டோசு சிஈ, விண்டோசு என்டி |
மூலநிரல் வடிவம் | மூடிய மூலம் |
கேர்னர்ல் வகை | கலப்பின கருவகம் |
அனுமதி | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம் |
தற்போதைய நிலை | பொதுவில் பகிரப்படுகிறது |
இணையத்தளம் | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
மூடு
விண்டோசின் சமீபத்திய பதிப்பு விண்டோசு 11 ஆகும். விண்டோசு 10 பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.